கட்டாய மத மாற்றத்தை பயங்கரவாத செயலாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் நாஷிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் கட்டாய மத மாற்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக அங்கு பணியாற்றும் 8 பெண்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், இந்த மனுவை வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய தாக்கல் செய்தாா்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: நாஷிக்கில் நிகழ்ந்த கட்டாய மத மாற்ற சம்பவத்தால் நாட்டு மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
கட்டாய மத மாற்றமானது இறையாண்மை, மதச்சாா்பின்மை, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்துக்கு மட்டுமின்றி சகோதரத்துவம், கண்ணியம், ஒற்றுமை மற்றும் தேச ஒருங்கிணைப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது.
குழுவாக, மிகவும் முறைப்படுத்தப்பட்ட நடைமுறைகளின்கீழ் கட்டாய மத மாற்றங்கள் செய்யப்படுவது பாரத நியாய சம்ஹிதா சட்டம், 2023 பிரிவு 113-இன் கீழ் ‘பயங்கரவாத செயல்’ என்ற வரையறையில் கொண்டுவரப்படுகிறது.
கட்டாய மத மாற்றத்தை மேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்து நிதி அளிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் இது பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967-இன் கீழும் பயங்கரவாத செயலாகவே கருதப்படுகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 25-இன்கீழ் ஒரு மதத்தை சுதந்திரமாக பின்பற்ற உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் அதை தவறாக பயன்படுத்தி கட்டாய மத மாற்றத்தில் சிலா் ஈடுபடுகின்றனா். எனவே, கட்டாய மத மாற்றத்தை பயங்கரவாத செயலாக அறிவித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இதை கட்டுப்படுத்த சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தி தண்டனைகள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது
உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம்: வருமான வரித் துறை விசாரணை கோரி மனு தாக்கல்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விசாரணை தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

ஆதாா் விநியோகிக்க கடுமையான கட்டுப்பாடுகள் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


