மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் விடுமுறை: அஸ்ஸாம் அரசு!

அஸ்ஸாம் சட்டப்பேரவை அன்று பொது விடுமுறை பற்றி..

News image

பொது விடுமுறை - dps

Updated On :24 மார்ச் 2026, 6:52 am

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அஸ்ஸாம் அரசு அறிவித்துள்ளது.

பொது நிர்வாகத் துறையின் ஆணையர் மற்றும் செயலாளரான எம். எஸ். மணிவண்ணன் வெளியிட்ட அறிவிப்பின்படி,

1881 ஆம் ஆண்டின் மாற்றத்தக்க ஆவணங்கள் சட்டத்தின் பிரிவு 25-இன் கீழ் இந்தப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் ஏப்ரல் 9 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலத் துறை வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில்,

அனைத்து தொழிற்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், கடைகள் மற்றும் பொதுப் பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை நிறுவனங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

Summary

The Assam government declared a public holiday on April 9 as assembly polls are scheduled on that day, according to notifications.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.