பொது சிவில் சட்டம் பழங்குடியினரைப் பாதிக்காது என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.
ஏப்ரல் 9-ஆம் தேதி மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பரபரப்பாகத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அதிகரித்துவரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ராகுலை விமர்சித்துள்ளது பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையிலான வார்த்தைப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஜோர்ஹட்டில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல், டொனால்ட் டிரம்ப் மோடிக்கு உத்தரவிடுகிறார். ஆனால் மோடி எதுவும் சொல்வதில்லை, ஏனென்றால் மோடியின் எதிர்க்காலம் டிரம்பின் கையில் உள்ளது என அவருக்குத் தெரியும்.
டிரம்ப் நரேந்திர மோடியைக் கட்டுப்படுத்துகிறார். டிரம்ப் மோடியிடம் குதிக்கச் சொன்னால், மோடி எவ்வளவு காலம் என்று கேட்டுவிட்டுக் குதிக்கத் தொடங்கிவிடுவார். டிரப்பின் முழுக் கட்டுப்பாட்டில் மோடி உள்ளார். சர்மாவின் ஊழல் குற்றங்கள் பற்றி பிரதமர் மோடிக்குத் தெரியும் என்பதால் அஸ்ஸாம் முதல்வர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கமாட்டார் இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஹிமந்த சர்மா,
காங்கிரஸ் வெற்றி பெறும் என்று நம்புபவர்கள் "முட்டாள்தனமானவர்கள்" என விமர்சித்துள்ளார்.
மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது குறித்துக் கேட்டபோது, பழங்குடியின சமூகங்களின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தினார். பழங்குடியினர் பொது சிவில் சட்டத்திலிருந்து தனியாக வைக்கப்படுவார்கள். பொது சிவில் சட்டம் பழங்குடியினரை பாதிக்காது எனத் தெளிவுபடுத்தினார்.
திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை நிர்வகிக்கும் பல்வேறு தனிநபர் சட்டங்களுக்குப் பதிலாக, சமத்துவம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் பாலின நீதியை ஊக்குவிக்கும் வகையில் ஒரு பொதுவான, மதச்சார்பற்ற சட்டக் கட்டமைப்பைக் கொண்டு வருவதை பொது சிவில் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தீவிரமான அரசியல் சொல்லாடல்களுக்கும் தேர்தல் பிரசாரங்களுக்கும் மத்தியில், அஸ்ஸாமில் உள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குகளை எண்ணும் பணி மே 4-ஆம் தேதி நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நடைபெறுவதை அஸ்ஸாம் மாநிலம் காணவிருக்கிறது.
Summary
Assam Chief Minister Himanta Biswa Sarma on Saturday described those who believe in Congress winning "crazy", days after the latter claimed that Prime Minister Narendra Modi "controls" the CM.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு வங்கி அரசியலுக்கு முடிவு கட்ட பொது சிவில் சட்டம்: மேற்கு வங்கத்தில் பிரதமா் மோடி வாக்குறுதி

ஜனநாயகக் கடமையாற்றினார் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா!

பெண்களுக்கு மாதம் ரூ. 3,000.. இது அஸ்ஸாம் பாஜகவின் வாக்குறுதி!

வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் விடுமுறை: அஸ்ஸாம் அரசு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



