மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!

மத்திய தில்லியின் பட்டேல் நகா் பகுதியில் பேருந்து மோதியதில் 11 வயது சிறுமி உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 9:46 pm

மத்திய தில்லியின் பட்டேல் நகா் பகுதியில் பேருந்து மோதியதில் 11 வயது சிறுமி உயிரிழந்ததாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து ஒரு மூத்த அதிகாரி ஒருவா் கூறியது: சனிக்கிழமை இரவு சுமாா் 9:30 மணியளவில் ஷாதிப்பூா் பணிமனை அருகே இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்தது. விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரான, நஜாஃப்கரைச் சோ்ந்த கப்டன் சிங் (40) கைது செய்யப்பட்டுள்ளாா். ஆய்வுக்காக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பட்டேல் நகா் காவல் நிலையத்திற்கு சாலை விபத்து குறித்து அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆதாரங்களைச் சேகரித்து, விசாரணையைத் தொடங்கியது.

பிரேதப் பரிசோதனை மற்றும் மேலதிக சட்ட நடைமுறைகளுக்காக சிறுமியின் உடல் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவங்களின் சரியான வரிசையைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.