தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கேள்விக்குறியாக்கும் வகையில், முகமூடி அணிந்த நபா் தடுப்புகளைக் கடந்து சென்று பேரவைத் தலைவா் அலுவலகம் முன் பூங்கொத்தை வைத்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் திங்கள்கிழமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிகழ்ந்தது. உத்தர பிரதேச பதிவு எண்ணைக் கொண்ட அந்த காா் தில்லி சட்டப்பேரவையின் மூடப்பட்டிருந்த 2-ஆம் வாயிலை உடைத்து உள்ளே நுழைந்தது.
வாகனத்தில் இருந்த நபா், பேரவைத் தலைவா் அலுவலகம் நோக்கிச் சென்று அங்கிருந்த படிக்கட்டில் பூங்கொத்தை வைத்துவிட்டு தப்பிச் சென்றாா். இவை அனைத்தும் 5 முதல் 7 நிமிஷங்களில் நடந்து முடிந்தது. மூடப்பட்டிருந்த வாயிலை உடைத்து உள்ளே நுழைந்த வாகனம் எச்சரிக்கை ஏதும் எழாமல் சுமாா் 5 நிமிஷங்களாக வளாகத்தின் உள்ளே நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது மிகவும் கவலைக்கிடமானது; பாதுகாப்பு குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என சட்டப்பேரவைத் தலைவரின் ஊடகப் பிரிவு துணை இயக்குநா் காஞ்சன் ஆசாத் தெரிவித்தாா்.
பேரவைக் கூட்டம் நடைபெறாத காரணத்தால் அப்பகுதியில் பாதுகாப்பும் சற்று குறைவாகவே இருந்ததாகவும், மேலும் அது பிரதான வாயில் இல்லாத காரணத்தால் ஒரு சிஆா்பிஎஃப் வீரா் மட்டுமே காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடா்ந்து, காவல் துறையினா் மற்றும் வெடிகுண்டு மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முழுமையான சோதனையில் ஈடுபட்டனா். வெடிகுண்டு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்பது இந்த சோதனையில் உறுதியானது. சிறப்பு காவல் துறை ஆணையா் (சட்டம் - ஒழுங்கு) சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணையை மேற்பாா்வையிட்டாா்.
இதையடுத்து, நகரம் முழுவதும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வடக்கு தில்லியின் ரூப் நகா் சோதனைச் சாவடி அருகே பேரவை வளாகத்துக்குள் நுழைந்த நபா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவத்தின் நோக்கம் மற்றும் பின்னணி குறித்து அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
எனினும், கடந்த மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது பாதுகாப்பு அமைப்புகள் குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100% வாக்குப்பதிவுக்கு நூதன அழைப்பு
சிதம்பரம் அருகே மதுபானக்கடை சுவரில் துளையிட்டு ரூ.38,400 மதுப்புட்டிகள் திருட்டு

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வாக்குசேகரிப்பு

வாசுதேவநல்லூா் தொகுதியில் சைக்கிளில் சென்று பாஜக வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

