விஞ்ஞான உலகில் ரோபோகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் பல்வேறு வடிவங்களைப் பெற்றுள்ளது. அந்த வகையில் தண்ணீரில் செல்லும் கண்ணுக்கே தெரியாத மென்மையான ரோபோவை அமெரிக்காவின் மசாசூஷெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பொறியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
ஜெல்லி மீன்களைப்போல் இருக்கும் இந்த மென்மையான ரோபோ வெறும் தண்ணீரால் இயக்கப்படுகிறது. இதுகுறித்து கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியாளர் குழுத் தலைவர் ஜுனே ஸஹோ கூறுகையில், "இந்த வகையிலான மென்மையான ரோபோக்கள் "ஹைட்ரோஜெல்' மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.
இவை பார்ப்பதற்கு தெள்ளத் தெளிவாகவும் ரப்பர் இணைப்புகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதில் வெறும் தண்ணீரை மட்டும் ஊசி மூலம் செலுத்தினால் போதும், இந்த வகையிலான ரோபோக்களுக்கு அசையும் தன்மை கிடைத்துவிடும்.
அதன்படி, ஒரு மீனைப்போன்ற வடிவில் இறக்கைகள், வால், உடல் பகுதிகளை ஹைட்ரோஜெல்லால் உருவாக்கி லேசர் மூலம் துல்லியமாக கட் செய்து, அதில் தண்ணீரைச் செலுத்தி சோதித்தோம். அது ஜெல்லி மீனைப்போல் தண்ணீரில் நீந்தியது.
இந்த ரோபோக்கள் தண்ணீரில் இருக்கும்போது யாராலும் கண்டுபிடிக்க முடியாது. தண்ணீரில் இருந்தபடியோ ஒரு பந்தை உதைக்கும் அளவுக்கு சக்தி இந்த ரோபோக்களுக்கு கிடைக்கிறது. பின்னர் தண்ணீரில் இருந்து வெளியே எடுத்த பிறகு, ஹைட்ரோஜெல்லில் உள்ள நீரை மீண்டும் ஊசி வைத்து உறிஞ்சி எடுத்தால் மீண்டும் பழைய நிலைக்கே இந்த ரோபோக்கள் வந்துவிடுகின்றன.
மற்றொரு சோதனையில், ஹைட்ரோஜெல்லை நீண்ட கைகளைப்போல் உருவாக்கி தண்ணீர் தொட்டியில் உள்ள ஒரு வளர்ப்பு மீனைப் பிடிக்க வைத்தோம். அதுவும் வெற்றி பெற்றது.
வழக்கமான ரோபோ மூலம் மீனைப் பிடித்தால் பிடிபடும் மீனுக்குப் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்த மென்மையான ரோபோ மீனை மென்மையாகப் பிடித்து பின்னர் வெளியிட்டது. இது எங்கள் ஆராய்ச்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
அடுத்தகட்டமாக "ஹைட்ரோஜெல்' ரோபோவை மருத்துவத் துறையில் பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். அறுவைச் சிகிச்சையின்போது மனிதர்களின் மென்மையான தசைப்பகுதிகளை கையாள ஹைட்ரோஜெல் கைகளை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது'' என்கிறார் ஜுனே ஸஹோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பகல் 1 வரை... 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் தவெக மனு!

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


