தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

டேஸ்டி ஸ்பைஸி கோதுமை ரவை பொங்கல்!

கோதுமை ரவை, பாசிப் பருப்பு இரண்டையும், உப்பு சேர்த்து ஒன்றாக வேக வைக்கவும்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2018, 9:44 am

தேவையானவை :
கோதுமை  ரவை -1கிண்ணம் 
பாசிப்பருப்பு -3/4 கிண்ணம்
துருவிய  இஞ்சி - 1/4 கிண்ணம்
நறுக்கிய பச்சைமிளகாய் - 1
உப்பு - தேவையான  அளவு
தாளிக்க:
மிளகு,சீரகம் - 1 தேக்கரண்டி
நெய் -1/2கிண்ணம்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயப்பொடி - 1தேக்கரண்டி 
மிளகு, சீரகப் பொடி- 1தேக்கரண்டி
 

Story image

செய்முறை:  

கோதுமை ரவை, பாசிப் பருப்பு இரண்டையும், உப்பு சேர்த்து ஒன்றாக வேக வைக்கவும்.  நன்கு, வெந்த பிறகு  இறக்கி ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பின்னர்,  ஒரு வாணலியில்  நெய்விட்டு, மிளகு சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய்,  கறிவேப்பிலை, பெருங்காயப் பொடி தாளித்து பொங்கலுடன் சேர்த்து   நன்கு கிளறவும்.  சுவையான கோதுமை ரவை பொங்கல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.