டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இணையத்தில் பொருட்கள் வாங்கும் முன்…..

மற்ற பொருட்களை வாங்குவது போல ஒரு மொபைல் ஃபோன், டாப்லெட், கிண்டில் ஃபயர், கேமரா,

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:42 pm

உமா ஷக்தி.

மற்ற பொருட்களை வாங்குவது போல ஒரு மொபைல் ஃபோன், டாப்லெட், கிண்டில் ஃபயர், கேமரா, லேப்டாப் போன்ற காட்ஜெட்டுகளை வாங்குவது அத்தனை சுலபம் அல்ல. இவற்றை நேரில் சென்று வாங்கும்போதே சொதப்பலாகிவிடும். சில சமயம் ஆசையாக வாங்கிய பின் ஏனோ பிடிக்காமல் போய்விடும். அல்லது கடைக்காரர் காண்பிக்கும் போது அவர் பேசிய விதத்தில் சட்டென்று வாங்கிவிடுவோம். ஆனால் நாம் நினைத்தபடி அது இருக்காமல் போகும். விலை கொடுத்து வாங்கிவிட்டபின் மாற்றவும் முடியாது. என்ன செய்யது? கடையிலோ இணைய தளத்திலோ தரமான எலக்ட்ரானிக் ஐட்டங்களை தேர்ந்தெடுப்பது செய்வது எப்படி? இதற்கு சிறிதளவு திட்டமிடல் அவசியம். அப்போது தான் தரமான பொருளைத் தேர்ந்தெடுத்து வாங்க முடியும். இப்படி அலசி ஆராய்ந்து அந்தப் பொருளை வாங்குகையில் சரியானவை கிடைப்பதுடன் பணமும் மிச்சமாகும் என்கிறார்கள் நிபுணர்கள்.

Story image

நமக்குத் தேவையான ஃபோன்களை வாங்க சில டிப்ஸ்களைத் தருகிறார் திவ்யன் குப்தா. இவர் Gizmofashion.com இணையதளத்தின் நிறுவனர் ஆவார்.

காலண்டரைப் பார்க்கவும் –

அவசரமாக வாங்கத் தேவை இல்லை எனில், பண்டிகை காலம் வரும் வரை நீங்கள் விரும்பும் பொருளை வாங்கக் காத்திருக்கவும். ஏனெனில் பண்டிகை காலத்தில் சிறப்பு சலுகைகள் கிடைக்கும். சலுகை விலையில் தேவையானவற்றை வாங்கிவிடலாம்.

விமரிசனங்களைப் படியுங்கள்

நீங்கள் வாங்க விரும்பும் ஃபோன் அல்லது டேப்பைப் பற்றி இணையதளங்களில் அதன் பயன்பாட்டாளர்கள் எழுதியுள்ள குறை நிறைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் அதே மாடலைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால், அவர்களிடமும் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள். விளம்பரங்களைப் பார்த்து ஒருபோதும் மயங்கிவிட வேண்டாம். விளம்பரத்தில் கூறப்பட்ட விஷயங்கள் உண்மையா இல்லையா என்பதை இத்தகைய விமரிசனங்களைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒப்பு நோக்கி வாங்குங்கள்

ஒவ்வொரு கம்பெனியின் விலையை பட்டியல் இட்டு எதிர் எதிரே அதன் விலை மற்றும் வசதிகளை ஒப்புமை செய்து பார்ப்பது  சகஜம்தான். தற்போது இதற்கென ஒரு புதிய செயலி வந்துள்ளது. அதைப் பதிவிறக்கம் செய்து ஒப்பு நோக்கலாம். நாம் வாங்க விரும்பும் பொருளின் விலையில் ஆரம்பித்து அளவு, எடை போன்ற நுண் தகவல்கள் வரை அனைத்தையும் சீர் தூக்கி அலசி ஆராய்ந்து இறுதியில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

இணையத்தில் வாங்கும் போத

காட்ஜெட்டுகளை இணையதளத்தில் வாங்கும் போது போலிகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஊர் பேர் தெரியாத நிறுவனத்தில் அதிக சலுகை தருகிறார்கள் என்று வாங்க முடிவெடுத்துவிட்டால், அதன் பின் ஏமாந்து போவது நீங்கள் தான். பிரபலமான இணைய விற்பனையாளர்களிடம் பொருட்களை வாங்குவதே சாலச் சிறந்தது. இணையத்தில் அவர்களுக்கு இருக்கும் நன்மதிப்பு, சரியான முறையில் பொருட்கள் முகவரிக்கு வந்து சேருகின்றதா என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருங்கள். விற்பனையாளர்களின் உத்திரவாதம் இல்லை எனில் ஆன்லைனில் ஒருபோதும் எந்த பொருளையும் வாங்கவே கூடாது.

Story image

மீண்டும் சரி பார்க்கவும்

முக்கியமான மற்றொரு விஷயம், இணையதளத்தில் தேவைப்படும் பொருட்கள் வாங்கிய பின் அது உங்கள் கைக்கு வந்து சேரும் போது பிரிக்கப்படாமல் இருக்கிறதா என்பதை பார்த்துவிட்ட பின்னர் தான் அதை நீங்கள் பெற வேண்டும். நீங்கள் ஆர்டர் செய்த பொருள்தானா என்பது சரி பார்த்து, அதற்கான சீரியல் நம்பர்களையும் ஒப்பிட்ட பின்னர் வாங்குவது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.