டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பிரம்ம குமாரிகள் நடத்தும் அமைதிப் பேரணி

இன்றைய உலகில் ஒரு புறம் அரிய கண்டுபிடிப்புகள் கூடி, வசதிகள் வளர்ந்து கொண்டே போனாலும்,

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:40 pm

உமா ஷக்தி.

இன்றைய உலகில் ஒரு புறம் அரிய கண்டுபிடிப்புகள் கூடி, வசதிகள் வளர்ந்து கொண்டே போனாலும், இன்னொருபுறம் தனி மனித அமைதி, உலக அமைதி, சமுதாய நல்லிணக்கம் போன்றவை குறைந்து கொண்டே வருவது கவலைக்குரிய விஷயமாகும். மேலும் நாளுக்கு நாள் சமுதாயத்தில் பகைமை, வெறுப்பு, ஒழுக்கக் குறைவு, சுயநலம் போன்றவை அதிகரித்து வருவது வருந்தத்தக்கதாகும்.

எனவே இத்தருணத்தில் நாம் நம்மிடையே நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு சமுதாயத்தில் அமைதி, அன்பு, ஒற்றுமை நிலவ முயற்சி செய்வது நாட்டின் குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மேற்கூரிய சமூக நலன் காக்கும், கருத்துக்களின் மீது கவனத்தை ஈர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பிரம்மா குமாரிகள் இயக்கம் ஓர் அமைதிப் பேரணியை ஞாயிறு, ஜூலை 10, 2016 அன்று மாலை 5 மணிக்கு மெரினா கடற்கரை, காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்டு உழைப்பாளர் சிலை வரை ஏற்பாடு செய்துள்ளது.

இதனை ஜெய்பூர் மண்டல கிளைகளின் நிர்வாகி சகோதரி ராஜயோகினி சுஷ்மாஜி தலைமையில் மயிலை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர். ராஜேந்திரன் ஐபிஎஸ், சாந்தோம் சர்ச் பேராயர், பங்குத்தந்தை லூயிஸ் மத்தியாஸ், திரு.வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், காவல்துறை துணை ஆணையர், அரிமா சங்கத் தலைவி, சமூக ஆர்வலர் வசந்தி ரெங்கநாதன், பிரபல கர்நாடக இசைக்கலைஞர் உன்னி கிருஷ்ணன், டாக்டர் அமீன், நடிகர் தலைவாசல் விஜய், பாடகர் ராமு, ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழக மண்டல பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் மூத்த சகோதரிகள் பி.கு.கலாவதி மற்றும் பி.கு.பீனா ஆகியோர் அமைதியின் நோக்கம் பற்றி உரை நிகழ்த்துக்கின்றனர்.

மேற்படி அமைதிப் பேரணியில் சுமார் 1000 பேர் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.