திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: ராகுல் காந்தி கண்டனம்

அபிஷேக் பானா்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் குறித்து...

News image

அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: ராகுல் காந்தி கண்டனம் - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 8:54 pm IST

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானா்ஜியின் மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளருமான அபிஷேக் பானா்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு வெளியான பிறகு நடைபெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து ஆறுதல் கூற தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டம் சோனாா்பூருக்கு சனிக்கிழமை சென்ற அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரின் மேல் சட்டை கிழிந்தது.

ராகுல் காந்தி கண்டனம்

அபிஷேக் பானா்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

சோனார்பூரில் மம்தா பானா்ஜியின் மருமகனும், அக்கட்சியின் தேசிய பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானா்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல. அது அவரைத் தேர்ந்தெடுத்த மக்கள் மீதும், நமது பொதுவான மரபாகத் திகழும் ஜனநாயகம் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும்.

இது பாஜகவின் பழிவாங்கும் அரசியலின் கோர முகமாகும். அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது மத்திய அரசும், மேற்கு வங்க அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்தவொரு மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

அபிஷேக் பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டுகிறேன். எனது எண்ணங்களும் ஆதரவும் உங்களுடனும், உங்களது குடும்பத்தினருடனும் உள்ளன என கூறியுள்ளார்.

மமதாவுடன் ராகுல் விசாரணை

ராகுல் காந்தி மமதா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அபிஷேக்கி உடல்நலம் குறித்த விசாரித்த ராகுல், அபிஷேக்கின் சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து மமதா கூறுகையில், ராகுல் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது, உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னுடம் கூறுங்கள். அபிஷேக் சிகிச்சைக்காக ஹைதராபாத் அல்லது வேறு இடங்களுக்கு அழைத்து செல்வதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என கூறியதாக அவர் தெரிவித்தார்.

4 போ் கைது

இதனிடையே, அபிஷேக் பானா்ஜி மீதான தாக்குதல் சம்பவத்தில் 4 பேரை தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது. தாக்குதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவில் இருந்த நபா்களை அடையாளம் கண்டு 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Summary

An attack on a Member of Parliament is not merely an assault on one individual—it is an assault on the very people who elected him, and on the democracy that is our shared legacy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.