மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்ததாக காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், அந்த மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டம் சோனார்பூர் பகுதிக்கு அபிஷேக் பானர்ஜி சனிக்கிழமை (மே 30) சென்றாா்.
அந்த நேரத்தில், அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் அபிஷேக் பானர்ஜி மீது முட்டைகள், கற்கள், காலணிகள் போன்வற்றை வீசியும் அவரைக் கையால் தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டதையடுத்து, அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அபிஷேக் பானர்ஜி தரப்பிலோ திரிணமூல் காங்கிரஸ் தரப்பிலோ எந்தவொரு புகாரும் அளிக்கப்படாததால் காவல்துறையே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
அப்பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி மற்றும் விடியோ காட்சிகளின் அடிப்படையில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Summary
The police stated on Sunday that they have arrested four individuals in connection with the attack on Abhishek Banerjee in West Bengal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











