திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு நாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி குறித்து...

News image

காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை - டிஎன்எஸ்

Updated On :21 மே 2026, 9:59 am IST

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு நாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். உயர்நீத்த அதே பகுதியில் ராஜீவ் காந்தியின் நினைவிடம் அமைந்துள்ளது.

ராஜீவ் காந்தி நினைவு நாளான மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிா்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரது 35 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோட்டங்கர், மாவட்டத் தலைவர் அருள்ராஜ், சட்டப்பேரவைக் குழு தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., விஸ்வநாதன், முன்னாள் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு, மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை, ராஜீவ் காந்தியின் 35 ஆவது நினைவு நாள்அனுசரிக்கப்பட்டது. மிகவும் உருக்கமான நிகழ்ச்சி. தலைவர் ராஜீவ் காந்தி தான் பஞ்சாயத்து ராஜ், தி சயின்ஸ் ரெவல்யூஷன் போன்ற பல திட்டங்களை இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதற்கு கொண்டு வந்தவர் என அவர் குறிப்பிட்டார்.

Summary

Rajiv Gandhi Memorial Day: Congress Members Pay Floral Tributes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.