காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!

தவெக தலைவா் விஜய் வியாழக்கிழமை மீண்டும் ஆளுநரை சந்தித்து தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை...

News image

மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய தவெக தலைவர் விஜய். - ஏஎன்ஐ

Updated On :6 மணி நேரங்கள் முன்பு

சென்னை: தவெக தலைவா் விஜய் ஆளுநரை புதன்கிழமை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், வியாழக்கிழமை மீண்டும் ஆளுநரை சந்தித்து தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும். பேரவையில் பெரும்பான்மையை நிரூப்பிப்போம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து புதன்கிழமை இன்று (மே 6) உரிமை கோரிய நிலையில், ஆதரவு எம்.எல்.ஏக்களின் முழுப் பட்டியல் கொடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், அறுதிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்பதால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளுக்கு தவெக ஆதரவு கோரி கடிதம் மூலம் அழைப்பு விடுத்தது.

காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் 5 பேர் ஆதரவு

இதில், காங்கிரஸ் 5 இடங்களிலும், இடதுசாரிகள் தலா 2 இடங்களிலும், விசிக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவுடனான கூட்டணியை முறித்து கொண்ட காங்கிரஸ், தவெகவுக்கு திடீா் ஆதரவு அளித்தது. இதையடுத்து தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 ஆக உயந்துள்ளது. எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் தேவை உள்ளது.

விஜய் பதவியேற்பு?

இந்த நிலையில், ஆதரவு உறுப்பினர்களின் முழுப் பட்டியலை கொடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் தவெகவிடம் கோரப்பட்டுள்ளதை அடுத்து, திட்டமிட்டபடி விஜய் வியாழக்கிழமை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை.

இதையடுத்து ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் தவெக தொடர்ந்து விசிக, கம்யூனிட்டுகள் உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சொகுசு விடுதி அதிமுக எம்.எல்.ஏ-க்கள்

இதனிடையே, திடீர் திருப்பமாக வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் புதுச்சேரி புதுகுப்பத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு

இந்த நிலையில், ஆளுநரை புதன்கிழமை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை நிலையில், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று (மே 7) விஜய் மீண்டும் சந்தித்து அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என தெரிவித்துள்ளார்.

Summary

TVK leader Vijay met the Governor again on Thursday to request that his party—as the single largest party—be invited to form the government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.