தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

தமிழக முதல்வர் விஜய்! ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுத்தார்.

News image

விஜய்க்கு ஆளுநர் வழங்கிய ஒப்புதல் கடிதம்

Updated On :9 மே 2026, 8:46 pm IST

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுத்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாகத் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை அவர்கள் பெறவில்லை. அவர்களுக்கு ஆதரவளிக்க திமுக கூட்டணியில் 5 எம்.எல்.ஏ.க்களை வென்ற காங்கிரஸ் கட்சி முதலில் ஆதரவு தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் தலா 2 இடங்களை வென்ற இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை எண்ணிக்கை கிடைத்ததால் ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை இன்று ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.

ஆளுநர் மாளிகைக்கு அவருடன் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த கூட்டணிக் கட்சித் தலைவர்களும் சென்றனர்.

ஆட்சியமைக்க உரிமை கோரி ஏற்கெனவே 3 முறை ஆளுநரைச் சந்தித்து ஏமாற்றத்துடன் திரும்பிய விஜய்யின் 4-ஆவது சந்திப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.

தற்போது தவெகவுக்கு(107), காங்கிரஸ்(5), இந்திய கம்யூனிஸ்ட்(2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(2) என மொத்தம் 120 எம்எல்ஏக்கள் ஆதரளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கவும், தவெக சார்பில் ஆட்சியமைக்கவும் ஆளுநர் அழைப்பு விடுத்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை விஜய்யிடம் வழங்கினார்.

மே 13 ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வராக விஜய்யின் பதவியேற்பு விழா மே 10 அன்று காலை 10 மணியளவில் நேரு அரங்கில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ஆளுநரின் ஒப்புதல் அறிக்கை

ஆளுநரின் ஒப்புதல் அறிக்கை

Summary

Vijay: Chief Minister of Tamil Nadu! Governor Extends Invitation to Form Government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.