தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சத்தீஸ்கரில் 2 யானைகள் சடலங்களாக மீட்பு!

சத்தீஸ்கரில் இரண்டு யானைகள் சடலங்களாக மீட்கப்பட்டது குறித்து...

News image

யானைகள் இறப்பு - கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2026, 11:24 am

சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் புதன்கிழமை (மார்ச் 11) சடலங்களாக மீட்கப்பட்டன.

கார்கோடா வனப்பகுதியில் உள்ள குர்குட் ஆற்றில் இரண்டு யானையின் சடலங்கள் காணப்பட்ட நிலையில், மண்டல வன அதிகாரியின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டன என்று வனத்துறை அதிகாரி இன்று தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விசாரணைக்கு உதவுவதற்கு ஒரு நாய் மற்றும் மின்சாரத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள், பறக்கும் படை ஊழியர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே பலிக்கான காரணங்கள் உறுதி செய்யப்படும் என்றும், குளிக்கும்போது அல்லது நதியைக் கடக்கும்போது மூழ்கி பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 26 மாதங்களில் மின்சாரத் தாக்குதல், வேட்டையாடப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 38 யானைகள் மற்றும் 9 புலிகள் பலியாகியுள்ளதாக சத்தீஸ்கர் அரசு சட்டப்பேரவையின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Two elephants die in Chhattisgarh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.