வாஷிங்டன்: அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் ஏவுகணை ஆயுதக் கிடங்கு அதன் முந்தைய இருப்பில் இருந்து தற்போது 21 முதல் 22% ஆக குறைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 இல் தாக்குதல் நடத்தின. இதனையடுத்து, ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.
இதையடுத்து அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இடைக்கால ஒப்பந்தம் எட்டப்படுவதில் இழுபறியாக நீடிக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் ஏவுகணை ஆயுதக் கிடங்கு அதன் முந்தைய இருப்பில் இருந்து தற்போது 21 முதல் 22% ஆக குறைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முற்றிலுமாக அழித்துவிட்டது
இது தொடர்பாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா, ஈரான் ராணுவ அமைப்பை "முற்றிலுமாக அழித்துவிட்டது" என்றும், அந்தநாடு தனது ஏவுகணைக் கையிருப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே தக்கவைத்துள்ளது என்றார்.
ஈரானின் பெரும்பான்மையான ஏவுகணை உற்பத்தி மையங்கள் மற்றும் ஏவுதளங்கள் அமெரிக்காவின் நேரடித் தாக்குதல்களில் முற்றிலும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் ஏவுகணை ஆயுதக் கிடங்கு அதன் முந்தைய இருப்பில் இருந்ததைப் போல இல்லை என்றும், தற்போது அது சுமார் 21 முதல் 22 சதவீதமாக குறைந்துவிட்டது.
மேலும், எஞ்சியிருப்பவை கணிசமான எண்ணிக்கையில் இருந்தாலும், பொரும்பாலான ஏவுதளங்கள், ட்ரோன் தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்திப் பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டது என்றார்.
விரைவில் முடிவு எட்டப்படும்
ஹோர்முஸ் நீரிணையை பாதித்து வரும் தற்போதைய இடையூறுகளுக்கு விரைவில் முடிவு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த டிரம்ப்,"இதற்கு அதிக காலம் ஆகாது. எப்படியாவது, இது செய்து முடிக்கப்படும். எல்லாம் சரிசெய்யப்பட்டவுடன், எரிபொருள் விலைகள் முன்பிருந்ததை விடக் குறைவாகக் குறையக்கூடும்" என்று தெரிவித்தார்.
விரைவில் வரவிருக்கும் இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக, அமெரிக்கா முழுவதும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் தொடர்பாக டிரம்பும் குடியரசுக் கட்சியும் கடுமையான உள்நாட்டு அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முக்கிய கடல்வழிப் பாதை வழியாக வெற்றிகரமாகப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற அமெரிக்க வர்த்தக எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை குறித்துக் கேள்விக்கு, "நிறைய. எத்தனை என்று நான் சொல்ல விரும்பவில்லை, ஆனால் நிறைய" என்று டிரம்ப் பதிலளித்தார்.
இருப்பினும், டிரம்பின் தகவலுக்கும் அமெரிக்க உளவுத்துறை வட்டார தரவுகளும் முற்றிலும் முரணாக உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டங்களில், ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள தனது 33 ஏவுகணைத் தளங்களில் 30-இன் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை தெஹ்ரான் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது என்றும், மோதலுக்கு முந்தைய தனது ஏவுகணை திறனில் சுமார் 70 சதவீதத்தை ஈரான் இன்னும் வைத்திருப்பதாக மதிப்பிட்டுள்ளன.
Summary
US President Donald Trump has claimed that Iran's missile capabilities have been severely degraded....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றம்!

ஈரான் ஒப்பந்தத்துக்கு இணங்காவிட்டால் எதுவும் மிஞ்சாது! - டிரம்ப் மிரட்டல்!

ஹோர்முஸ் நீரிணைக்கு சுங்கக் கட்டணம் விதிக்கக் கூடாது! - டிரம்ப் உடனான சந்திப்பில் சீன அதிபர் கறார்!







