திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முடங்கிக்கிடக்கும் ரயில்வே திட்டங்கள் ஆய்வு: அஸ்வினி வைஷ்ணவ் ஜூன் 6-ல் கொல்கத்தா பயணம்

மேற்கு வங்கத்தில் முடங்கிக்கிடக்கும் பல்வேறு ரயில்வே திட்டங்களின் பணிகள் குறித்து அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு நடத்த இருப்பது தொடர்பாக...

News image

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு - டிஎன்எஸ்

Updated On :4 ஜூன் 2026, 9:43 am IST

மேற்கு வங்கத்தில் முடங்கிக்கிடக்கும் பல்வேறு ரயில்வே திட்டங்களின் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை(ஜூன் 6) கொல்கத்தா செல்லவுள்ளார்.

இது தொடர்பாக கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஷிபாஜி மாஜி தெரிவித்ததாவது:

மேற்கு வங்கத்தில் முடங்கிக்கிடக்கும் பல்வேறு ரயில்வே திட்டங்களின் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை கொல்கத்தா வரவுள்ளார்.

ரயில்வே அமைச்சர், மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், கிழக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு எல்லை மற்றும் மெட்ரோ ரயில்வே ஆகிய மண்டலங்களின் பொது மேலாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த கூட்டத்தில் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் ரயில்வே உள்பட மாநிலத்தில் தேங்கி நிற்கும் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஆய்வு அமையும் என்றும், இது ரயில்வே மேம்பாடு தொடர்பான மத்திய-மாநில உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் மாஜி தெரிவித்தார்.

கொல்கத்தா மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளையும் திட்டங்களின் வேகத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

மேலும், ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களும் சனிக்கிழமை பிற்பகல் கொல்கத்தா வருகை தர உள்ளதாகவும், அன்று மாலை பல்வேறு ரயில்வே சார்ந்த அமைப்புகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக மாஜி கூறினார்.

மேற்கு வங்கத்தில் பல ரயில்வே திட்டங்கள், குறிப்பாக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விஷங்களில் மாநில அரசின் ஒத்துழைப்பின்மையால் தாமதமாவதாக, கடந்த மார்ச் மாதம் வைஷ்ணவ் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Union Railway Minister Ashwini Vaishnaw is scheduled to arrive in Kolkata on Saturday to expedite the progress of various stalled railway projects in West Bengal...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.