தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய திட்டங்களால் வரும் நாள்களில் விமானப் பயணங்களைவிட ரயில் பயணங்களை மக்கள் விரும்பும் சூழல் உருவாகும் என ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: கடந்த நிதியாண்டில் திட்டமிடப்பட்டிருந்த ஒட்டுமொத்த மூலதனச் செலவினமும் மாா்ச் முதல் வாரத்தில் செலவிடப்பட்டது. பிப்ரவரி மாத இறுதியில் 98 சதவீதம் செலவிடப்பட்டிருந்தது.
நாட்டில் ஒட்டுமொத்தமாக 49,000 கிலோ மீட்டா் ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இது ஜொ்மனியின் ஒட்டுமொத்த ரயில் வழித்தடத்தையும்விட அதிகமானது. அதேபோல் 36,000 கிலோ மீட்டா் தொலைவுக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்விட்சா்லாந்து நாட்டுக்கு சமம்.
மும்பை-புணே இடையே அமைக்கப்பட்டுவரும் புதிய வழித்தடத்தால் ரயில் பயண நேரம் 28 நிமிஷங்களாகவும், புணே-ஹைதராபாத் வழித்தடத்தால் ஒரு மணி நேரம் 55 நிமிஷங்களாகவும், ஹைதராபாத்-பெங்களூரு வழித்தடத்தால் 2 மணி நேரமாகவும், பெங்களூரு-சென்னை வழித்தடத்தால் 78 நிமிஷங்களாகவும் குறையவுள்ளது.
இதுபோன்ற சிறப்பான திட்டங்களால் வரும் நாள்களில் விமானப் பயணங்களைவிட ரயில் பயணங்களை மக்கள் விரும்புகிற சூழல் உருவாகும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முடங்கிக்கிடக்கும் ரயில்வே திட்டங்கள் ஆய்வு: அஸ்வினி வைஷ்ணவ் ஜூன் 6-ல் கொல்கத்தா பயணம்

ரயில் தீ விபத்துக்குப் பின்னணியில் சமூக விரோதிகள்: அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயரதிகாரிகள் ஆலோசனை







