திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரயில் தீ விபத்துக்குப் பின்னணியில் சமூக விரோதிகள்: அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயரதிகாரிகள் ஆலோசனை

மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயரதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அஸ்வினி வைஷ்ணவ் - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 2:55 am IST

அண்மையில் நிகழ்ந்த சில ரயில் தீ விபத்துகளின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயரதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த சில நாள்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் சமூக விரோதிகளின் தலையீடு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள மூத்த ரயில்வே அதிகாரிகளுடன் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது தீ விபத்துகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.

வருங்காலங்களில் ரயில்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலனாய்வு அமைப்புகளை வலுப்படுத்தவும் தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் ரயில்வே தலைமையகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் ரயில் பயணத்தின்போது பயணிகள் கவனமாகவும் விழிப்பாகவும் இருப்பதோடு சந்தேகத்துக்குரிய நபா்கள் குறித்து 139 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடா்புகொண்டு புகாரளிக்கவும் ரயில்வே துறை கேட்டுக்கொண்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.