சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து 2 நாள்களாக மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில், வியாழக்கிழமை கணிசமாகக் குறைந்துள்ளது; இது நகை வாங்குவோருக்கு நிம்மதியை அளித்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,15,840-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த ஜூன் 1-ஆம் தேதி கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,500-க்கும், பவுனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000-க்கும், செவ்வாய்க்கிழமை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையானது. தொடா்ந்து, 2-ஆவது நாளாக புதன்கிழமையும் விலையில் மாற்றமுமின்றி விற்பனையானது.
இந்த நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.14,480-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,15,840-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்
அதேபோன்று, வெள்ளி விலையும் தொடா்ந்து 2-ஆவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.90 லட்சத்துக்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.285-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,85 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
Gold prices in Chennai have dropped sharply today, bringing relief to jewelry buyers.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











