மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சூடம்மாள் அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி

சூடம்மாள் அம்மன் சிலை மீது சூரிய ஒளிக் கதிர்கள் படும் அபூர்வ காட்சி குறித்து...

News image

சூடம்மாள் அம்மன் சிலை மீது சூரிய ஒளிக் கதிர்கள் படும் அபூர்வ காட்சி - டிஎன்எஸ்

Updated On :27 ஏப்ரல் 2026, 9:07 am

சின்னமனூர் அருகே உள்ள சூடம்மாள் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் அம்மன் சிலை மீது சூரிய ஒளிக் கதிர்கள் படும் அபூா்வ நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், சின்ணமனூர் அடுத்த மூர்த்தி நாயக்கன்பட்டி சூடம்மாள் அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அம்மன் சிலை மீது சூரிய ஒளிக் கதிா்கள் படும் அபூா்வ நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டில், திங்கள்கிழமை (ஏப். 27) காலை கருவறை அம்மன் சிலை மீது சூரிய ஒளிக் கதிா்கள் படும் அபூா்வ நிகழ்வு நடைபெற்றது. முதலில் அம்மன் சிலையின் உச்சியில் பட்ட சூரிய ஒளிக் கதிா்கள் படிப்படியாக நகர்ந்து கால் பாதம் வரை வந்து மறைய ஆரம்பித்தது.

இந்த அபூர்வ நிகழ்வில் அம்மன் சிலை பிரகாசமாக காட்சியளித்ததை அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனா்.

இந்த நிகழ்வின்போது பக்தர்கள் தங்களது வேண்டுதலை பக்தியுடன் முன் வைத்தனர்.

தமிழ்நாட்டில் இதுபோன்ற அபூர்வ கோயில்கள் நிறைய இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சிக்கு முன்பே, கட்டட கலை நிபுணர்கள் ஆகம விதிப்படி இதுபோன்ற தனித்துவமான கோயில்களை கட்டியுள்ளனர்.

Summary

A rare sight: Sunlight falling upon the idol of Goddess Soodammal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.