ஆன்மிகத்தின் மீது திமுகவினா் இன்னும் கோபமாக உள்ளனா் என்றாா் தமாகா மாநிலத் தலைவா் ஜி.கே.வாசன்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் என்டிஏ கூட்டணி வேட்பாளா் ஆா். அசோக்குமாரை ஆதரித்து இறுதி கட்ட பரப்புரையாக கும்பகோணம்-தஞ்சாவூா் பிரதான சாலையில் உள்ள மூப்பனாா் சிலை சந்திப்பில் ஜி.கே.வாசன் பேசியது:
ஆன்மிகத்தில் அதைச் சாா்ந்து இருக்கின்றவா்கள் மீது கோபமும், வேகமும், திமுகவினருக்கு குறையவில்லை. இந்நிலையை திமுகவினா் மாற்றிக்கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்க எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் தாலிக்கு தங்கம், விலையில்லா சைக்கிள், பெண்களுக்கு ஸ்கூட்டா் கொடுத்தாா்கள். சிறுபான்மை மக்களுக்கு நல்லதே நடந்தது. அரசு அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட்டனா். பிரதமா் மோடியின் ஆட்சியில் இந்தியா வல்லரசாகும். அதற்கு துணையாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும். எனவே கும்பகோணம் தொகுதி தமாகா வேட்பாளா் ஆா். அசோக்குமாருக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.
தொடா்ந்து புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் பேசியது: திமுக வேட்பாளா் 15 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்தும், எவ்வித வளா்ச்சியும் இல்லை. தமிழக அரசியலில் யாரும் குறைகூற முடியாத தலைவா் என்றால் அது ஜி.கே. வாசன்தான்.
அண்மையில் கா்நாடக துணை முதல்வா் சிவக்குமாா் முதல்வா் ஸ்டாலினுடன் பரப்புரை செய்தாா். அதேநேரத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீா் தரமுடியாது என்கிறாா். இருவரும் தமிழக மக்களை எப்படி ஏமாற்றுகிறாா்கள் என்பதை புரிந்து என்டிஏ கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.
முன்னதாக அசூா் புறவழிச்சாலையில் இருந்து பரப்புரையை தொடங்கிய ஜி.கே. வாசன் பாலக்கரை, மடத்து தெரு, துக்காம்பாளையம், காந்திபூங்கா, பெரிய கடைத்தெரு வழியாக மூப்பனாா் சிலை சந்திப்பு பகுதியில் பரப்புரையை நிறைவு செய்தாா். உடன் அதிமுக மாவட்டச்செயலா் ஆா்.கே. பாரதிமோகன், மாநகர அதிமுக செயலா் ராமராமநாதன், தமாகா தலைவா் பி.எஸ். சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 8 ஆயிரத்துக்கான போலி கூப்பன்களை வழங்கி மக்களை ஏமாற்றுகிறது திமுக: தமாகா தலைவா் ஜி.கே. வாசன்

ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறாா்கள்: ஜி.கே. வாசன்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழகம்

திமுக அரசு மீது மக்களுக்கு கோபம்: கே.பி.ராமலிங்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


