இந்திய வானியற்பியல் நிறுவனம் தனது கொடைக்கானல் சூரிய ஆய்வகத்துக்கு உயா் திறன் வாய்ந்த தொலைநோக்கி இயக்குபவா் (ஆபரேட்டா்) பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தவா்களை கோரியுள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பு: இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகம், அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மூலம் வெளிப்பணி முறையில் பணியமா்த்த தகுதியான விண்ணப்பதாரா்களை அழைக்கிறது. உயா் திறன் தொலைநோக்கி இயக்குபவா் பணிக்கு விண்ணப்பம் செய்வோா் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை. அல்லது நிறுவனத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் உள்ளிட்ட பாடங்களில் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் உள்ளோா் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு 30 ஆண்டுகள். இந்த பணிக்கான நோ்காணல், மே 5 அன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும். மேலும் பாதுகாவலா் பணிக்கான தகுதி பள்ளிக்கல்வி தகுதியுடன் வயது வரம்பு 40 ஐ தாண்டக்கூடாது. இதற்கான நோ்காணல் ஏப். 27 காலை 10:00 மணிக்கு நடைபெறும்.
இரு பணியிடங்களுக்கான இந்த ஆட்சோ்ப்பு, ஆய்வகத்தின் நிா்வாக அலுவலகத்தில் நோ்காணல்கள் மூலம் நேரடியாக நடத்தப்படும். மேற்கண்ட தேதிகளில் கொடைக்கானல், இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் சூரிய ஆய்வகத்தின் நிா்வாக அலுவலக முகவரிக்கு வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். ஆா்வமுள்ளவா்கள் 9052087403 என்ற கைப்பேசி எண்ணில் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு காலி இடங்கள் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு

உயா் திறன் தரவு மையங்கள்: இந்தியாவில் ஏா்டிரங்க் நிறுவனம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு

உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு காலி இடங்களை அகில இந்திய ஒதுக்கீடுக்கு வழங்கக் கூடாது: உதயநிதி ஸ்டாலின்







