பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்!

நாட்டின் பிரபல மூத்த புகைப்படக் கலைஞர் ரகு ராய் (83) காலமானது குறித்து...

News image

பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார் - எக்ஸ்

Updated On :26 ஏப்ரல் 2026, 2:46 pm

நாட்டின் பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய்(83) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

நாட்டின் பிரபல மூத்த புகைப்படக் கலைஞரும், புகைப்பட இதழியலின் முன்னோடியாக போற்றப்படுபவருமான ரகு ராய், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது உடல் மாலை 4 மணியளவில் தில்லியில் உள்ள லோதி சாலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தற்போது பாகிஸ்தானில் உள்ள ஜங் பகுதியில் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி பிறந்த ராய், 1960 இல் தனது புகைப்படக் கலைஞர் தொழிலை தொடங்கியவர், 1965 இல் 'தி ஸ்டேட்ஸ்மேன்' நாளிதழில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். 1976 இல் அந்த செய்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறியவர், 1982 முதல் 1992 வரை 'இந்தியா டுடே' நாளிதழில் பத்து ஆண்டுகள் புகைப்பட ஆசிரியராக பணியாற்றினார். மேலும், 1990 மற்றும் 1997-க்கு இடைப்பட்ட காலங்களில், 'வேர்ல்ட் பிரஸ் ஃபோட்டோ' அமைப்பின் நடுவர் குழு உறுப்பினராக பணியாற்றினார்.

இவரது வழிகாட்டியான புகழ்பெற்ற பிரெஞ்சு புகைப்படக் கலைஞரான ஹென்றி கார்டியர்-பிரெஸான், ராயின் படைப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் 1977-ஆம் ஆண்டில் ராயை உலகின் மிகவும் புகழ்பெற்ற புகைப்பட அமைப்புகளில் ஒன்றான 'மேக்னம் ஃபோட்டோஸ்' அமைப்பில் இணையுமாறு பரிந்துரைத்தார். 'மேக்னம்' அமைப்பில் இணைவதற்கு மிகச்சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகவும் மதிக்கப்படும் புகைப்படக் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த ராயின் புகைப்படங்கள் பெரும்பாலும் நவீன இந்தியாவின் "காட்சிப் பதிவு" என்று வர்ணிக்கப்படுகின்றன. இவரது புகைப்படங்கள் குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து இவர் எடுத்த கறுப்பு வெள்ளை படங்கள் மிகவும் புகழ்பெற்றவை.

1984 -இல் வரலாற்றிலேயே மிக மோசமான தொழில்சார் பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் போபால் விஷவாயுப் பேரழிவின் விளைவுகள் குறித்து இவர் எடுத்த படங்கள் காலம் கடந்து நிற்பவை.

அதே வேளையில், அன்னை தெரசா மற்றும் இந்திரா காந்தி போன்ற புகழ்பெற்ற ஆளுமைகளின் தனிப்பட்ட தருணங்களைச் சித்தரிக்கும் நெருக்கமான புகைப்படங்களையும் அவர் தனது புகைப்படக் கருவியின் கண்களால் ஆவணப்படுத்தியவர்.

வங்கதேச விடுதலைப் போரின்போது அவர் எடுத்த வரலாற்றுத் தருணங்கள் குறித்து இவர் எடுத்த புகைப்படங்களுக்காக, அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.

தனது புகைப்பட நூல்களுக்காக பரவலாக அறியப்பட்ட ராய், இந்தியா: ரிஃப்ளெக்ஷன்ஸ் இன் கலர்' மற்றும் 'ரிஃப்ளெக்ஷன்ஸ் இன் பிளாக் அண்ட் ஒயிட்' ஆகியவை அவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் சில.

1992-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் அவருக்கு "சிறந்த புகைப்படக் கலைஞர்" என்ற கௌரவம் வழங்கப்பட்டது.

2019-இல் புகைப்படக் கலைத்துறையின் மிக உயர்ந்த சர்வதேச விருதுகளில் ஒன்றான ''அகாதெமி டெஸ் பியூக்ஸ்-ஆர்ட்ஸ் புகைப்பட விருதை' வென்றார். மேலும், 2017-இல் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி அவரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கௌரவித்துள்ளது.

Summary

Veteran photographer Raghu Rai died today after a two-year-long battle with cancer.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.