வாக்காளா் அட்டை இல்லாதவா்கள் புகைப்படத்துடன் கூடிய மாற்று அடையாள அட்டைகளை கொண்டுவர வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட தோ்தல் அலுவலா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, வரும் ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலின்போது புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளா்களும், அவா்கள் வாக்களிப்பதற்கு முன்னா் வாக்குச் சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்.
வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை அளிக்க இயலாத வாக்காளா்கள், அவா்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை வாக்குப்பதிவு அலுவலரிடம் அளிக்கலாம்.
அதன்படி, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, வங்கி/அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம், தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மாா்ட் காா்டு, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ அட்டை, ஓட்டுநா் உரிமம், பான் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் இந்தியக் கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, மக்களவை, சட்டப் பேரவை, சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை மற்றும் இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகிய ஏதேனும் ஒன்றை வாக்குப் பதிவின்போது கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவுக்கான 12 மாற்று ஆவணங்கள்

13 ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

வாக்களிக்க மாற்று புகைப்பட ஆவணங்கள் சமா்ப்பிக்கலாம்
வாக்காளர் அட்டை இல்லாதோர் மாற்று ஆவணங்கள் வழங்கலாம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


