நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், தனது கட்சியின் தேர்தல் பிரசார பாடலான "தலைவன் இருக்கின்றான்" என்ற பாடலின் விடியோவை இன்று (ஏப்.19) வெளியிட்டுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி தானே கதாநாயகனாக நடிக்கும் அரசியல் திரைப்படம் "தலைவன் இருகின்றான்".
இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தனது ஆர்.கே.ஃப்.ஐ தயாரிப்பு நிறுவனத்துடன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
"தலைவன் இருகின்றான்" நீண்ட காலமாக அறிவிக்கப்பட்டு, தயாரிப்பில் இருந்து வரும் ஒரு அரசியல் படம்.
படம் முழுவதும் இந்திய அரசியலமைப்பை சார்ந்தும், அரசியலில் சமீபகாலமாக பேசப்பட்டு வரும் பிரசனைகளை உள்ளடக்கிய ஒரு வலுவான கதையம்சம் கொண்டதாக உருவாக்கி வருவதாகவும், உலக நாயகன் நடிப்பில் 1992 இல் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த "தேவர் மகன்" திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், தனது கட்சியின் தேர்தல் பிரசார பாடலான "தலைவன் இருக்கின்றான்" என்ற பாடலின் விடியோவை இன்று(ஏப்.19) வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் "தமிழே எழுவாய்... தமிழே வெல்வாய்... - தலைவன் இருக்கின்றான்" என்ற தலைப்பில் விடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், இன்று அறிவார்ந்த தமிழ் மக்கள் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்தது. அதன் விளைவுதான் "தலைவன் இருக்கின்றான்" என்ற பாடல்.
அதில் ஒரு வரி "என்றும் தமிழகம் வென்றிட வேர்விட, விதையாய், செடியாய், மரமாய், காடாய், வீடாய், நாடாய், உலகாய் விரிந்திட, வாழ்த்ததுமே, வாழ்த்ததுமே" என பாடப்பட்டுள்ளது.
Summary
Kamal Haasan, regarding the release of his party's election campaign song, "Thalaivan Irukkindran"...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவுக்கு ஆதரவாக கமல் குரல்! வெளியானது தலைவன் இருக்கிறான் பாடல்!
விஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்!
தேர்தலில் மநீம போட்டியிடவில்லை! - கமல்ஹாசன்
பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத சமூகம் நாகரீக சமுதாயமாக இருக்க முடியாது: கமல்ஹாசன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



