தேர்தல் பிரசாரம் முடிவடைய இரண்டு நாள்களே உள்ள நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவா் ராகுல்காந்தி, குளச்சல், நான்குனேரியில் திங்கள்கிழமை (ஏப். 20) நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா்.
சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவுபெற உள்ளதால் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக வேட்பாளா்கள் இறுதிகட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தமிழகத்தில் 2 ஆவது கட்ட தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி திங்கள்கிழமை(ஏப்.20) தமிழகம் வருகிறாா்.
திங்கள்கிழமை பகல் 11 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் நடைபெறும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளா்களை ஆதரித்து நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறாா்.
பின்னா், பிற்பகல் 1 மணிக்கு நான்குனேரி வரும் ராகுல்காந்தி, களக்காடு-நான்குனேரி பிரதான சாலையில் உள்ள நான்குனேரி தொகுதி காங்கிரஸ் கமிட்டி அலுவலக வளாகத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா்.
இந்த கூட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களான சுப்பிரமணியன்(திமுக), அப்துல்வஹாப்(திமுக), வி.பி.துரை (காங்.), ரூபி ஆா். மனோகரன் (காங்.), மு. அப்பாவு (திமுக) ஆகியோரை ஆதரித்துப் பேசுகிறாா்.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவுவதாக தோற்றம் ஏற்பட்டிருந்தாலும்,திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவுவதாக தோற்றம் ஏற்பட்டிருந்தாலும், திமுக, அதிமுக, தவெக என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
Summary
Rahul Gandhi will participate in public meetings to be held in Colachel and Nanguneri on Monday (April 20) and speak in support of the candidates
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தருமபுரியில் ஐந்து தொகுதிகளில் 83 வேட்பாளா்களின் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி கிழக்கில் நாளை விஜய் பிரசாரம்: 27 கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் அனுமதி!

பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



