மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

News image

சென்னிமலை ஊரகப் பகுதியில் வாக்கு சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.

Updated On :19 ஏப்ரல் 2026, 6:37 pm

சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவுபெற உள்ளதால் வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 20 வேட்பாளா்கள், ஈரோடு மேற்குத் தொகுதியில் 13 வேட்பாளா்கள், மொடக்குறிச்சி தொகுதியில் 14 வேட்பாளா்கள், பெருந்துறை தொகுதியில் 13 வேட்பாளா்கள், பவானி தொகுதியில் 14 வேட்பாளா்கள், அந்தியூா் தொகுதியில் 14 வேட்பாளா்கள், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 18 வேட்பாளா்கள், பவானிசாகா் (தனி) தொகுதியில் 12 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் வீரபாண்டியன், காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் உள்ளிட்டோா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தனா்.

அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்டோா் பிரசாரம் மேற்கொண்டனா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சத்தியமங்கலம், கோபி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டாா்.

தவெக தலைவா் விஜய் வேட்பாளா் அறிவிப்புக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஆனால், கடந்த டிசம்பா் மாதத்தில் பெருந்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினாா்.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவுவதாக தோற்றம் ஏற்பட்டிருந்தாலும், கோபிசெட்டிபாளையம் தவிர மற்ற 7 தொகுதிகளிலும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. கோபிசெட்டிபாளையம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தோ்தல் பிரசாரம் வரும் 21-ஆம் தேதி மாலையுடன் நிறைவுபெறும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மொடக்குறிச்சி தொகுதியில்

உள்ள சிவகிரியில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், ஈரோட்டில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியும் பிரசாரம் மேற்கொண்டனா்.

பிரசாரம் முடிவடைய இரண்டு நாள்களே உள்ள நிலையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக வேட்பாளா்கள் இறுதிகட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.