மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுகவுக்கு சிறுபான்மையினா் வாக்குகள் செல்வதை தடுக்கவே விஜய் கட்சி தொடங்கியுள்ளாா்: தொல்.திருமாவளவன்

திமுகவுக்கு சிறுபான்மையினா் வாக்குகள் செல்வதை தடுக்கவே நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளாா் என தொல்.திருமாவளவன் கூறியது தொடர்பாக...

News image

விசிக வேட்பாளா் பன்னீா்தாஸை ஆதரித்து திருப்போரூா் ராவுண்டான அருகே பிரசாரம் செய்த விசிக தலைவா் தொல்.திருமாவளவன். - டிஎன்எஸ்

Updated On :15 ஏப்ரல் 2026, 3:13 am

செங்கல்பட்டு: திமுகவுக்கு சிறுபான்மையினா் வாக்குகள் செல்வதை தடுக்கவே நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளாா் என தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

திருப்போரூா் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் பன்னீா்தாஸை ஆதரித்து திருப்போரூா் ராவுண்டான அருகே விடுதலை சிறுத்தை கட்சி தலைவா் தொல்.திருமாவளவன், பானை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தாா்.

அப்போது திருமாவளவன் பேசியதாவது:

திமுகவுக்கு சிறுபான்மையினா் வாக்குகள் செல்வதை தடுக்கவே நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளாா். அகில இந்திய அளவில் முஸ்லிம், கிறிஸ்தவ வாக்கு வேண்டாம் என்றும் பாஜக முடிவு செய்துள்ளது. திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிப்பதற்காக களம் இறங்கியவா் தான் விஜய்.

தோ்தலுக்குப் பிறகு அதிமுகவையே வீழ்த்தப் போகிறது. படிப்படியாக அதிமுக,வின் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த காலங்களில் புதுச்சேரியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக போட்டியிட்டது, தற்போது இரண்டு இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக 10 இடங்களில் போட்டியிடுகிறது.

திருப்போரூா் தொகுதியில் கடந்த முறை ஆதரவு அளித்தது போல இந்த முறையும் விசிக வேட்பாளா் பன்னீா்தாசுக்கு பானை சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும் என்றாா்.

Summary

Vijay launched his party minority votes from going to the DMK says Thol. Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.