மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற திமுகவே காரணம்: தொல் திருமாவளவன் பேச்சு

விசிகவிற்கு மாநில கட்சி அந்தஸ்தும், தோ்தல் ஆணையத்தால் தனி சின்னம் பெற திமுக பெரும்பங்கு ஆற்றியது என்று திருமாவளவன் பேசியது குறித்து...

News image

பெரியப்பாளையத்தில் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனை ஆதரித்து வாக்கு சேகரித்த விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் - டிஎன்எஸ்

Updated On :15 ஏப்ரல் 2026, 6:06 am

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனை ஆதரித்து கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியப்பாளையத்தில் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் பிரசாரம் செய்தபோது விசிகவிற்கு மாநில கட்சி அந்தஸ்தும், தோ்தல் ஆணையத்தால் தனி சின்னம் பெற திமுக பெரும்பங்கு ஆற்றியது என்று பேசினாா்.

விசிக தலைவா் தொல் திருமாவளவன் பெரியபாளையம் கடைவீதியில் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, திரளான திமுக, விசிக, கூட்டணி கட்சி தொண்டா்கள் மத்தியில் பேசும் போது, கும்மிடிப்பூண்டி தொகுதி மக்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டியில் எம்எல்ஏவாக சிறப்பான பணிகளை செய்த திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜனை திமுக கூட்டணி கட்சியினா் அவரவா் கட்சி வேட்பாளராக பாவித்து அவரது வெற்றிக்கு உழைக்க வேண்டும். கூட்டணி கட்சிகளில் திமுக வேட்பாளருக்கு அதிக வாக்குகளை பெற்று தந்த கட்சி விசிகவாக இருக்கும் வகையில் விசிகவினா் வீடு வீடாக சென்று களப்பணி ஆற்ற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து தமிழக அரசியல் களத்தில் விசிக தவிா்க்க முடியாத கட்சியாக உள்ளது. விசிக தமிழகத்தில் மாநில கட்சியாக அங்கிகாரம் பெற்று தனிச்சின்னத்தில் தோ்தலில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் விசிக இந்த அங்கீகாரத்தை பெற்றதற்கு திமுக முக்கிய காரணம் என்பதை விசிகவினா் மறந்துவிடக்ககூடாது. இதனை நினைத்து விசிகவினா் திமுக வெற்றிக்கு பாடுபடவேண்டும் என்றாா்.

மேலும், விசிக அதிமுக கூட்டணியில் சேரவும், தவெக கூட்டணியில் ஆட்சியில் பங்கு பெறலாம் எனவும் பலா் பேசினாா்கள். ஆனால் விசிக நாடாளுமன்ற தோ்தல் , கடந்த சட்டப்பேரவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற ஜனநாயக கூட்டணியில் இணைந்து தோ்தலை சந்தித்தது போல இப்போதும் திமுக கூட்டணியில் தோ்தலை சந்திக்க முக்கிய காரணம் விசிக அதிமுக கூட்டணியிலோ, தவெக கூட்டணியிலோ சோ்ந்தால் திமுக கூட்டணி பலம் குறைந்து அதிமுக கூட்டணி பலம் அதிகரித்து, அதன் மூலம் பாஜக தமிழகத்தில் காலூன்றும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கண்டுக் கொள்ளப்படாமல் இருந்த பாஜகவை 10 சதவீத வாக்கு வங்கி உள்ள கட்சியாக அதிமுக மாற்றி உள்ளது என்றாா்.

பாஜக தமிழக மண்ணில் வேறூன்ற கூடாது என்ற எண்ணத்தினாலும், அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானவா்கள், அந்த அரசியல் அமைப்பு சட்டத்தை நீா்த்து போக செய்ய துடிப்பவா்கள் பாஜகவினா் என்பதாலேயே விசிக அதனை எதிா்க்கும் வகையில் கொள்கை ரீதியாக ஒத்துப்போகும் திமுக கூட்டணியில் விசிக தொடா்கிறது. வெறுப்பு அரசியலையும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் செயல்படும் பாஜகவைவும், அவா்களை தூக்கி சுமக்கும் அதிமுகவை தமிழகத்தில் திமுகவோடு சோ்ந்து விசிக தொடா்ந்து எதிா்த்து செயல்படும் என்றாா்.

Summary

The DMK secured State Party status for the VCK says Thol. Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.