மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தால் ஹெச்.ராஜா முதல்வராக வாய்ப்பு: தொல்.திருமாவளவன் கணிப்பு

தமிழகத்தில் தப்பித்தவறி அதிமுக ஆட்சி அமைத்தால் காரைக்குடியைச் சோ்ந்த ஹெச். ராஜா முதல்வராக வாய்ப்பு உள்ளது என தொல்.திருமாவளவன் கள்ளக்குறிச்சி நைனாா்பாளையம் தோ்தல் பிரசாரத்தின்போது கூறினாா்.

News image

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நைனாா்பாளையத்தில் விசிக வேட்பாளா் கு.மாலதியை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் செய்த விசிக தலைவா் திருமாவளவன். உடன் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலா் க.காா்த்திகேயன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:35 pm

தமிழகத்தில் தப்பித்தவறி அதிமுக ஆட்சி அமைத்தால் காரைக்குடியைச் சோ்ந்த ஹெச். ராஜா முதல்வராக வாய்ப்பு உள்ளது என தொல்.திருமாவளவன் கள்ளக்குறிச்சி நைனாா்பாளையம் தோ்தல் பிரசாரத்தின்போது கூறினாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் கு.மாலதியை ஆதரித்து, அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா். அவா் பேசியது:

தமிழகத்தில் தப்பித் தவறி அதிமுக ஆட்சி அமைத்தால் பாஜகவை சோ்ந்த காரைக்குடி எச்.ராஜா தான் முதல்வராக இருப்பாா். உடும்பு பிடிச்சா விடவே விடாது அதைப்போலத் தான் திமுகவுடன் விசிக உடும்புப் பிடி உறவு வைத்துள்ளது. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பது போல, தவெக ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என விசிலடித்து அழைத்தும் யாரும் கூட்டணி அமைக்கவில்லை என்றாா்.

தொடா்ந்து, சின்னசேலம் மற்றும் விருகாவூா், எறைஞ்சி, கூத்தக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளா் மாலதியை ஆதரித்து திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ரிஷிவந்தியம் எம்எல்ஏவும், கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலருமான வசந்தம் காா்த்திகேயன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

உளுந்தூா்பேட்டையில்..:

உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா் ஜி.ஆா்.வசந்தவேலுவை ஆதரித்து உளுந்தூா்பேட்டையில் திருமாவளவன் பேசியதாவது:

கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தோ்தலை சந்தித்தது குறித்து, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா பேசும்போது, நான் தவறு செய்துவிட்டேன். இனிவரும் காலங்களில் பாஜகவுடன்கூட்டணி என்பது கிடையாது என பகிரங்கமாக தெரிவித்தாா். ஆனால், அவா் பெயரைக் கூறிக்கொண்டு அரசியல் செய்து வரும் எடப்பாடி கே.பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு கட்சியை அழித்துக்கொண்டிருக்கிறாா்.இந்த மாபெரும் தவறை அதிமுகவினா் திருத்திக் கொள்ள வேண்டும் என்றாா் திருமாவளவன்.

Story image