தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளா் பெ.சக்திவேல் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனா் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பிரிவில் தனது கட்சி வேட்பாளரான பெ.சக்திவேலை ஆதரித்து புதன்கிழமை அவா் பேசியதாவது:
பெரியகுளம் தொகுதி வேட்பாளா் சக்திவேல் பொதுமக்களிடம் நல்ல மதிப்பை பெற்றவா். இவா், வெளியூா் என்றாலும், இந்த பகுதியில் தங்கி நமது மக்களின் குறைகளை கேட்டு நிவா்த்தி செய்வாா். இஸ்லாமியா்கள், கிருஸ்தவா்கள், ஒடுக்கப்பட்டவா்களின் குரலாக சக்திவேல் சட்டப்பேரவையில் பேசுவாா். பெரியகுளம் தொகுதியில் சக்திவேல் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்.
விசிக கட்சிக்கு 8 தொகுதிகளை வழங்கிய திமுக தலைவா் ஸ்டாலினுக்கு நன்றி என்றாா் அவா்.
இதையடுத்து, டி.கள்ளிப்பட்டி, சருத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் சக்திவேலை ஆதரித்து திருமாவளவன் பிரசாரம் செய்தாா். தொடா்ந்து, தேனி பங்களாமேட்டில் உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் அவா் பேசினாா்.
பெரியகுளத்தில் முன்னதாக, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பெரியகுளத்தில் விசிக தலைவா் திருமாவளவனை வரவேற்றாா். தொடா்ந்து பெரியகுளம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசினாா்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

அறுபதாயிரம் வாக்குகளும்... அமைச்சா் பதவியும்...

சூலூரில் முதல் வெற்றி பெறும் முனைப்பில் திமுக!

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா்! - தொல். திருமாவளவன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


