விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன என்று அதன் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீ்ட்டு குழுவோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை மேற்கொண்டார். திமுக கூட்டணியில் விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன் பேசியதாவது, திமுக பேச்சுவார்த்தை குழுவோடு இரண்டாம் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விசிகவின் 8 தொகுதிகள் அடையாளம் கண்டு உள்ளோம். திமுக - விசிக இடையே தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டது.
எந்தெந்த தொகுதிகள் என முறைப்படி முதல்வர் அறிவிப்பார். எங்களுக்கு திருப்திகரமாக பேச்சுவார்த்தை இருந்தது. விருப்பமான தொகுதிகுகள் கிடைத்துள்ளன. அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கிய பிறகு முதல்வர் நாளை அறிவிப்பார்.
திமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்னை ஏற்படுமா என காத்து இருப்பவர்கள் ஏமாந்து தான் போவார்கள். எங்கள் கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளதால் தனித்தனியாக ஒவ்வொரு கட்சியையும் அழைத்துப் பேசும்போது ஒரு கட்சி கேட்கும் தொகுதியை மற்றொரு கட்சியும் கேட்கக்கூடிய சூழல் இருப்பதால் தாமதம் இருக்கத்தான் செய்யும். எங்களுக்குள் எந்த இழுபறியும் இல்லை.
இன்று இரவு அல்லது நாளை காலை அனைத்து தொகுதிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
புதுச்சேரியிலும் பானைச் சின்னம் ஒதுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, பானைச் சின்னத்தையும் ஒதுக்கவில்லை. சுயேட்சை சின்னத்திலேயே புதுச்சேரியில் போட்டியிட உள்ளார்கள்.
அதிமுக கூட்டணியில் உள்ள சின்ன, சின்ன கட்சிகளுக்கு நெருக்கடிகள் தருகிறார்கள். அங்கே தாமரையிலும் இரட்டை இலையிலும் நிற்க வேண்டும் என நெருக்கடியைத் தருகிறார்கள்.
தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஐந்து இடங்களை கொடுத்துவிட்டு தாமரையில் நிற்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார்கள்.
அந்த மாதிரியான பிரச்னைகள் எங்கள் கூட்டணியில் இல்லை. ஆனால் திமுக கூட்டணியில் இழுபறி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை.
பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசாரத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது குறித்தான கேள்விக்கு, விஜய்க்கு அனுமதி வழங்குவது இப்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதற்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தம் இல்லை எனத் தெரிவித்தார்.
Summary
VCK has secured its preferred constituencies, its leader Tholam Thirumavalavan has said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவுக்கு சிறுபான்மையினா் வாக்குகள் செல்வதை தடுக்கவே விஜய் கட்சி தொடங்கியுள்ளாா்: தொல்.திருமாவளவன்
கொள்கைக்காக திமுக கூட்டணியில் இருக்கிறேன்: தொல்.திருமாவளவன் ஆதங்கம்
விசிகவுக்கு 8 தொகுதிகள் பெற்றது ஏன்? திருமாவளவன் பேட்டி!

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



