திமுக தலைமையிலான மதச்சார்பற்றக் கூட்டணியில் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான வேலைகளை ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும், புதுவரவான தவெகவும் தீவிரப்படுத்தி வருகின்றன. 200 தொகுதிகளில் வென்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் எனும் முழக்கத்துடன் களத்தில் இருக்கும் திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் மொத்தம் 21 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், இ.யூ.மு.லீக், மமக., காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, தவாக, மக்கள் விடுதலை கட்சி, ம.நீ.ம., கொ.ம.தே.க., எஸ்.டி.பி.ஐ., ம.ஜ.க., முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதுவரை நடத்த பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும், ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 இடங்களும், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என தலா 5 தொகுதிகளும் உள்பட இதுவரை திமுக கூட்டணியில் 56 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கூட்டணியில் உள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையிலான குழுவினருடன், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான குழு தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை, அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 2 ஆம் தேதி நடத்தியது.
அப்போது, போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்கான பட்டியலை திமுக குழுவிடம் விசிக குழு வழங்கியது. அன்று நடைபெற்ற திமுக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இடையேயான முதல்கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில், திமுக கூட்டணியில் விசிக-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என 6 தொகுதிகளில் போட்டியிட்டது.
அடுத்தடுத்து நடைபெற்ற திமுக - விசிக பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டாமல் தொடர்ந்து இழுபறியில் நீடித்துவந்தது. இதனிடையே, திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (மார்ச் 23) நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், திமுக - விடுதலைச் சிறுத்தைகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த, விசிக தலைவர் திருமாவளவன் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்தார்.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிட தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையொப்பமானது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாட்டில் மொத்தம் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதெனவும் - அவற்றில் 6 தனித் தொகுதிகளிலும் 2 பொதுத் தொகுதிகளிலும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கோரிக்கை வைத்திருந்த விசிகவுக்கு கூடுதலாக இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Summary
Thirumavalavan's Viduthalai Chiruthaigal Katchi has been allotted 8 constituencies within the DMK-led Secular Alliance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன் சிறப்பு நேர்காணல்
கொள்கைக்காக திமுக கூட்டணியில் இருக்கிறேன்: தொல்.திருமாவளவன் ஆதங்கம்
தியாகியாகவே இருப்பாரா திருமாவளவன்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


