ஆற்காடு பகுதியில் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டதில், கணவன் மனைவி உடல்கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள தேவி நகர் என்ற பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மகாவீர் ஐஸ்கிரீம் கடையை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கடையின் உரிமையாளரான பவன்லால்(46) மற்றும் அவரது மனைவி சுந்தரிதேவி (42) ஆகிய இருவரும் தீயில் சிக்கி கருகிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஆற்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஸ்கிரீம் கடையை நடத்தி வியாபாரம் செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Summary
A tragic incident in the Arcot area, in which a husband and wife were burned to death following a fire at an ice cream manufacturing and sales outlet, has caused deep sorrow.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்!

மும்பையில் 16 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

ஐஸ் கிரீம் கடையில் தீ விபத்து: தம்பதி உயிரிழப்பு

சென்னையில் தீ விபத்து! ரூ. 1 கோடி மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



