சென்னை ஜி.பி. சாலையில் சத்தியமூர்த்தி பவன் அருகே மின்சாரம் பாய்ந்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கார் உதரி பாகங்கள் தீயில் கருகி நாசமாகின.
இதனால், அந்தச் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்படைந்து, பரபரப்பான சூழல் காணப்பட்டு வருகிறது.
சென்னை அண்ணா சாலையில் எல்ஐசி கட்டடம் அருகே ஜி.பி. சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் மூன்றாவது மாடியில் அஜித் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ மொபைல் உதரி பாகங்கள் குடோன் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
குடோனில் இருந்த ஊழியர்கள் தீயை அனைக்க முயற்சித்தபோது, திடீரென தீ வேகமாக பற்றி எரிந்தது. இதனால், குடோனில் பணிபுரிந்த ஊழியர்கள், பொதுமக்கள் அங்கிருந்துக் கீழே இறங்க தொடங்கினர்.
மேலும், இது குறித்து எழும்பூர் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் கூடுதலாக திருவல்லிக்கேணி, வேப்பேரி, பாரிமுனை, கீழ்ப்பாக்கம் , தேனாம்பேட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 7-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து வருகின்றனர்.
மேலும், கார் உதிரி பாகங்கள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து அருகிலுள்ள கடைகளுக்கும் தீ பற்றத் தொடங்கியது.
தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
குடோனில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும், கடையில் இருந்த சுமார் ஒரு கோடி மதிப்புடைய பொருள்கள் எரிந்து நாசம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
Summary
Car spare parts worth one crore rupees were destroyed in a fire caused by an electrical surge near Sathyamurthy Bhavan on G.P. Road in Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் 3 தொகுதிகளில் விஜய் இன்று பிரசாரம்!

சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

தனியார் வணிக வளாகத்தில் தீ! கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்! | Chennai

சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



