மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் டோக்கன் விநியோகம்!

பாகூர் பகுதியில் வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் டோக்கன் விநியோகம் குறித்து...

News image

திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் டோக்கன் விநியோகித்தவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றபோது அவற்றை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். - டிஎன்எஸ்

Updated On :9 ஏப்ரல் 2026, 3:07 am

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியாக நடைபெற்று வரும் நிலையில், பாகூர் பகுதியில் வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் டோக்கன் விநியோகத்தவர்களை திமுகவினர் விரட்டிப் பிடிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர்.

30 தொகுதிகளிலும் மொத்தம் ஆயிரத்து 99 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான என்.ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைக் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணிக்கும் நேரடிப் போட்டி, விஜய்யின் தவெக தலைமையிலான கூட்டணி என மும்முனை போட்டி நிலவி வருகிறது

மும்முனை போட்டி களத்தில் 34 தேசிய கட்சி வேட்பாளர்கள், 63 மாநில கட்சி வேட்பாளர்கள், 80 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத வேட்பாளர்கள், 117 சுயேச்சை வேட்பாளர்கள் என களத்தில் உள்ள மொத்தம் 294 வேட்பாளர்களின் அரசியல் தலை எழுத்தை வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 9.50 லட்சம் வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.

கடந்த பேரவைத் தேர்தலில் 82.2 சதவீதம் வாக்குப் பதிவாதியது. இந்த முறை 90 சதவீதத்திற்கு மேல் வாக்குப் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

புதுச்சேரி கோரிமேடு மதர் தெரசா செவிலியர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான குலோத்துங்கன் மக்களோடு மக்களாக காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் டோக்கன் விநியோகம்

இந்த நிலையில், புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியாக நடைபெற்று வரும் நிலையில், பாகூர் பகுதியில் வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் மளிகை பொருள்களுக்கான டோக்கன் விநியோகம் செய்து வருவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் டோக்கன் விநியோகித்தவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது, அவற்றை வீதிகளில் வீசி எறிந்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் திமுக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இது தொடர்பாக திமுகவினர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பாகூர் போலீசார் விரைந்து வந்து டோக்கனை கைப்பற்றி விசாரணை நடத்திய போது, என். ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கொடுக்கப்பட்டு தெரியவந்தது.

தொடர்ந்து பாகூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சார்பில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட தகவல் வெளியானதை அடுத்து புதுச்சேரிக்கு உள்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் இரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமானது.

Summary

Sensation in Puducherry: N.R. Congress members distribute tokens to voters in the Bahour area!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.