கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இது சாமானிய மக்களுக்காக, சாமானியர்களின் ஆட்சி. பொது மக்களின் நிர்வாகம் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

News image
சென்னை சிந்தாதிரிபேட்டை மே நாள் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated On :1 மே 2025, 9:37 am

DIN

சென்னை: திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

உலக உழைப்பாளர்கள் நாளை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிபேட்டை மே நாள் பூங்காவில் உள்ள மே நாள் நினைவுச் சின்னத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மே 1 ஆம் நாள் தொழிலாளர் நாளாக நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

உருண்டோடுகின்ற ரயிலை ஓட்டக்கூடியவர் ஒரு தொழிலாளி தான்! இழையை நூற்று நல்லாடை நெய்பவன் யார் என்று கேட்டால் அவரும் தொழிலாளி தான்! இரும்பு காய்ச்சி உருக்குபவன் யார் என்று கேட்டால் அவரும் தொழிலாளி தான்! மிராசுதாரர்கள் மேனாமினுக்கி வாழ்க்கைக்கான பொருள்களை உருவாக்கித் தரக்கூடியவர்கள் தொழிலாளியாக தான் இருக்கிறார்கள்! கடலில் மூழ்கி முத்து எடுப்பவனும் தொழிலாளியாக தான் இருக்கிறான்.

உழுது நன்செய் பயிரிடுபவனும் தொழிலாளி தான். அந்தத் தொழிலாளியின் இனம் மகிழ்ந்து கொண்டாடும் திருநாள்தான் மே நாள் என்று நம்முடைய பேரறிஞர் அண்ணா சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்!

அத்தகைய சிறப்புமிக்க, தொழிலாளர் தோழர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே நாளில் உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான்

திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான் என்று தந்தை பெரியார் பெருமையோடு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். 1932-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து தந்தவர் தந்தை பெரியார்.

ரஷியா போன்ற பல்வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டு தாயகமாம் தமிழகத்திற்கு திரும்பிய தந்தை பெரியார், இனி அனைவரையும் தோழர்கள் என்று அழைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் எடுத்துச் சொன்னார்கள்.

மே நாளைத் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் இசை நிகழ்ச்சிகளோடு கொண்டாடவேண்டும் என்று நம்முடைய சென்னை நகரம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொழிற்சங்க செயல்பாடுகளின் முக்கிய மையமாக இருந்தது.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

எட்டு மணி நேரம் வேலை எனும் உரிமைப்போரில் வென்றதற்கு இந்தியாவிலேயே முதன்முதலில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் மே நாள் கொண்டாடப்பட்டது இந்த சென்னை மாநகரத்தில் தான் என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

அதற்கும் முன்பே, இந்தியத் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக குறைக்க பெரும் முயற்சிகளை நீதிக் கட்சித் தலைவரான டி.எம்.நாயர் எடுத்திருக்கிறார்.

உழைப்பவனுக்கு மதிப்பளிக்க வேண்டும்

உழைப்புக்கு மதிப்பளிப்பது உண்மையாக இருக்க வேண்டும் என்று சொன்னால், உழைப்பவனுக்கு முதலில் மதிப்பளிக்க வேண்டும் என்றார்

ஊதியத்துடன் கூடிய விடுமுறை

பேரறிஞர் அண்ணா . அதன்படியே, 1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் மே-1 ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அண்ணா அவர்கள் கொண்டு வந்தார்கள்.

அதற்கு பிறகு பொறுப்பேற்ற கலைஞர் அந்த மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கி தந்தார். அதற்கு பிறகு சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மே 1 நம்முடைய மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலத்திற்கும் தொழிலாளர் நாளை ஊதியத்தோடு கூடிய விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, தலைவர் கலைஞர் அதையும் நிறைவேற்றி தர பாடுபட்டார் என்பதும் உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.

அவ்வளவு ஏன்?

இந்தப் பகுதியில் இங்கே நின்று கொண்டிருக்கிறோமே இந்த மே நாள் பூங்கா இதையும் உருவாக்கித் தந்தவர் தான் கலைஞர்.

பூங்காவை மட்டும் அல்ல, அதில் உள்ளே அமைந்திருக்கக்கூடிய நாங்கள் எல்லாம் சென்று மலர் வளையம் வைத்து, எங்கள் அஞ்சலியை, எங்கள் மரியாதையை, வணக்கத்தை செலுத்திவிட்டு வந்திருக்கிறோமே அந்த நினைவுச் சின்னத்தை ஏற்படுத்தித் தந்தவரும் கலைஞர் தான் என்பதை நான் இந்த நேரத்தில் பெருமையோடு எடுத்துச் சொல்லி, இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் மூலமாக இந்த நான்கு ஆண்டு காலத்தில் எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ சாதனைகளை தேர்தல் நேரத்தில் அறிவித்திருக்கக்கூடிய திட்டங்களை எல்லாம் நிறைவேற்றித் தந்து கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில், அதிலும் குறிப்பாக தொழிலாளர்களுக்காக செய்திருக்கக்கூடிய சாதனைகள் ஒன்றிரண்டை நான் உங்களிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால், கடந்த நான்காண்டு காலத்தில் 28 லட்சத்து 87 ஆயிரத்து 382 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,461 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம்.

உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம்

உணவு மற்றும் பிற பொருள்களை டெலிவரி செய்யும் (கிக்) தொழிலாளர்களுக்கும், தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்களுக்கும் தனி நல வாரியத்தை அமைத்திருக்கிறோம்.

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி, அதையும் நிறைவேற்றித் தந்து கொண்டிருக்கிறோம்.

20 அமைப்பு சாரா தொழிலாளர் வாரியங்களில், 2021-24 காலக்கட்டத்தில் 16 இலட்சம் ஊழியர்கள் புதிதாக பதிவு செய்திருக்கிறார்கள்.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அமரும் உரிமையை கட்டாயமாக்கி அரசாணையை வெளியிட்டிருக்கிறோம்.

கார்ல் மார்க்ஸ் சிலை

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, உலக மாமேதை பொதுவுடைமை தத்துவத்தை அளித்த பிதாமகன் கார்ல் மார்க்ஸ் அவர்களுடைய சிலையை சென்னையில் அமைப்போம் என்று நாம் சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறோம். அதுவும் விரைவில் அமைக்கப்பட இருக்கிறது.

தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு

ஆகவே, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகி வருகிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இதன் மூலமாக, தொழிலாளர்களும் வளர்ந்து வருகிறார்கள். தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பது மாதிரியே தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த முதலீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தாலும், எந்த முதலீட்டுத் திட்ட ஒப்பந்தம் கையெழுத்திட்டாலும், அப்போது நான் முதன்முதலாக கேட்பது என்னவென்றால், எவ்வளவு பேருக்கு வேலை தருவீர்கள் என்று நான் முதல் கேள்வியை நான் கேட்பதுண்டு. வேலை தருபவர் - பணியாளர் ஆகியோர் இடையிலான உறவை சமரசத்தின் மூலமாக நாம் சமப்படுத்தவேண்டும், பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அப்படித்தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சாமானியர்களின் ஆட்சி

இது சாமானிய மக்களுக்காக, சாமானியர்களின் ஆட்சி. பொது மக்களின் நிர்வாகம் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். என்றைக்கும் உங்கள் கூட - உங்களுக்காக நிற்கும், உங்களில் ஒருவன்தான் நானும், நம்முடைய அரசும்.

நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்

இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்பதுதான் எங்களின் இலட்சியம், கொள்கையாக வைத்து இலக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்! இதை மனதில் வைத்துதான் அரசு பல திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறது.

ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்

இன்னும் ஒரு வார காலத்தில், திராவிட மாடல் ஆட்சி உருவாகி, நான்காவது ஆண்டை நிறைவு செய்து, 5-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். எனவே, மே தினம் கொண்டாடக்கூடிய இங்கே இருக்கக்கூடிய தொழிலாளர் தோழர்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்களுக்காக உழைக்கின்ற, பாடுபடுகின்ற இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருந்து இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அந்த உறுதியை இந்த நல்ல நாளில் எடுத்துக் கொள்வோம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.