காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்தின் சகோதரர் நவீனுக்கு கூட்டுறவு பால் சங்கத்தில் டெக்னீசியன் பணிக்கான நியமன ஆணையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் நேரில் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரம் கிராமத்தில் மரணம் அடைந்த அஜித்குமார் என்பவரின் குடும்பத்தாரிடம், செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அக்குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, முதல்வரின் உத்தரவிற்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், புதன்கிழமை (ஜூலை 2) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில், பணி நியமன ஆணையினை மறைந்த அஜித்குமார் சகோதரரான நவீன்குமாருக்கு (27) , சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் லிட், காரைக்குடி டெக்னீசியன் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
மேலும், தேளி வருவாய் கிராமத்திற்குட்பட்ட புல எண். 40-11-ன் படி 0.01.20 ஏர்ஸ் (3 சென்ட்) பரப்பளவில், அஜித்குமார் தாயார் மாலதிக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், திருப்புவனம் வட்டாட்சியர் திரு.விஜயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
Summary
Ajith Kumar's younger brother gets a government job! He gets a free house and plot!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூட்டுறவின் வெற்றி!

750 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

வலசையூா் கூட்டுறவுச் சங்கத்தில் முறைகேடு: சங்கச் செயலா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


