சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

அம்பேத்கர் நினைவு நாள்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மரியாதை

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

News image
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி .
Updated On :6 டிசம்பர் 2025, 4:29 am

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கரின் 70 ஆவது நினைவு நாள் இன்று(டிச.6) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்.

இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது: "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவுகூர்வோம். அவரது தொலைநோக்கு தலைமைத்துவமும் நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசிய பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகின்றது.

மனித கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் தலைமுறைகளை ஊக்குவித்தவர். ஒரு வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்" என கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாலையில் விஐபி அமர்வில் கலந்து கொண்ட பல பிரமுகர்கள் மலர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.