வேட்டையன் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.
ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
துஷாரா விஜய் ‘சரண்யா’ கதாபாத்திரத்திலும் ரித்திகா சிங் ’ரூபா’ கதாபாத்திரத்திலும் நடிகை மஞ்சு வாரியர் ‘தாரா’ கதாபாத்திரத்திலும் அமிதாப் பச்சன் சத்யதேவ் பாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.

வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சமீபத்தில் வெளியாகி 20 மில்லியன் (2 கோடி) யூடியூப் பார்வைகளைக் கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஹன்டர் வந்துட்டார் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில், வேட்டையன் படத்தின் முன்னோட்டக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
தற்போது வேட்டையன் படத்தின் முன்னோட்டக் காட்சி மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...