டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்தின் அறிவிப்பு!

விஜய் சேதுபதியின் புதிய திரைப்பட அப்டே...

News image
விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா
Updated On :15 பிப்ரவரி 2026, 9:46 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூட்டணி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் கவனிக்கப்பட்டர், சூப்பர் டீலக்ஸ் மூலம் பரவலான பாராட்டுகளைப் பெற்றார்.

இறுதியாக, மார்டன் லவ் சென்னை இணையத்தொடரில் நினைவோ ஒரு பறவை படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது, நடிகர் விஜய் சேதுபதியை வைத்து தியாகராஜன் குமாரராஜா புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

இந்த நிலையில், இப்படத்தின் போஸ்டர் நாளை (பிப். 16) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களிடம் ஆவலைத் தூண்டியுள்ளது.

summary

vijay sethupathi and thiyagarajan kumararaja movie poster update

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.