டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாக்கெட் நாவல் : விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜாவின் புதிய படம்!

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு குறித்து....

News image
பாக்கெட் நாவல்- படம் - எக்ஸ்
Updated On :16 பிப்ரவரி 2026, 4:42 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு பாக்கெட் நாவல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுமட்டுமின்றி முதல்முறையாக தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் (TDKF) மூலம் பாக்கெட் நாவல் படத்தை தயாரிக்கிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன் இப்படத்திலும் இணைந்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

summary

Vijay Sethupathi - Thiagarajan Kumararaja's new film titled as Pocket Novel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.