டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உலகங்கள் ஒன்றிணையும் போது... ரஜினி - கமல் திரைப்படத்தை தயாரிக்கும் ரெட் ஜெய்ண்ட்!

ரஜினி - கமல் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது...

News image
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன்
Updated On :19 பிப்ரவரி 2026, 8:09 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கான புரோமோ படப்பிடிப்பு முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில், இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன.

Story image

மேலும், “உலகங்கள் ஒன்றிணையும் போது, ஒரு பக்கம் சாய்வதேது?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக, இதன் அறிவிப்பு இன்று மாலை 7.12 மணிக்கு வெளியாகும் என்றும் பதிவிட்டுள்ளனர். இது, நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாள் தேதி 7, ரஜினியின் பிறந்த நாள் தேதி 12 இரண்டையும் குறிப்பிடும் விதமாகவே இருப்பது ரஜினி - கமல் திரைப்பட அறிவிப்பு என்பதை உறுதி செய்துள்ளது.

summary

red giant announced 17th movie. it might be rajini - kamalhaasan film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.