டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரஜினி - கமல் நடிக்கும் படத்தின் புரோமோ ஆரம்பம்! இயக்குநர் இவரா?

ரஜினி - கமல் திரைப்படம் குறித்து....

News image
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன்
Updated On :19 பிப்ரவரி 2026, 4:04 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் புரோமோ பணிகள் துவங்கியுள்ளன.

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனை வைத்து புதிய திரைப்படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. நடிப்பது உண்மைதான்; இயக்குநர் யாரென முடிவாகவில்லை என ரஜினி கூறியிருந்தார்.

ஆனால், கதை காரணத்தால் இப்படத்திலிருந்து விலகிய லோகேஷ் கனகராஜ் நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படத்தை இயக்கச் சென்றார். ஜெயிலர் - 2 படத்திற்குப் பின் ரஜினி, கமல் ஹாசன் தயாரிப்பில் தன் 173-வது படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இதனை இயக்குகிறார்.

இதற்கிடையே, ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தின் நிலைமை என்னவெனத் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் இவர்கள் இருவரையும் இயக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கான புரோமோ படப்பிடிப்புக்காக செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.