நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

புதிய உச்சத்தில் தங்கம் விலை! இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சமாக வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

News image
சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 57,280-க்கு விற்பனை
Updated On :17 அக்டோபர் 2024, 5:03 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சமாக வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவது தங்கத்தை முதன்மை சேமிப்பாக நம்பியுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே இந்த விலை உயா்வு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக, தங்கம் விலை குறைந்து கொண்டே வந்து பவுன் ரூ.51 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால், தற்போது அதற்கு மாறாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.57,120-க்கும், கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ. 7,140-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை(அக். 17) ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 57,280 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.7,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பண்டிகை காலங்கள் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை. கூடிய விரைவில் தங்கம் விலை பவுன் ரூ.58 ஆயிரத்தை தொடும் என தங்கம் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

வெள்ளி விலையிலும் எந்தவித மாற்றமும் இல்லை. வெள்ளி கிராம் ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.