தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வங்கி அதிகாரிகள் நியமனம் நேர்காணல் மூலம் நடைபெறும் என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

வங்கி அதிகாரிகள் நியமனம் நேர்காணல் மூலம் நடைபெறும் என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்

News image
Updated On :2 மார்ச் 2024, 7:00 am

மதுரை: வங்கி அதிகாரிகள் நியமனம் நேர்காணல் மூலம் நடைபெறும் என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி அதிகாரிகள் நியமனங்களுக்கான முறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் வெளிச் சந்தையில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு பேரதிர்ச்சி தருவதாக உள்ளது. எனவே நேர்காணல் மூலம் நடைபெறும் என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இந்தாண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையில் முன் பணி அனுபவம் கட்டாயத் தகுதியாக வஇணைக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட வணிக வங்களில் 2 ஆண்டுகள், தனியார் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் மட்டுமே விண்ணப்பம் செய்ய இயலும் என்பதே அது.

கடந்த கால பணி நியமனங்களில் இந்த நிபந்தனை கிடையாது. இது வேலைக்காக வெளியே காத்திருக்கும் புதிய தேர்வர்களுக்கு, முன் பணி அனுபவம் இல்லாத கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு நியமனத் தேர்வில் பங்கேற்க இயலாமல் வெளியே நிறுத்துவது ஆகும்.

தேர்வு முறைமையில் எழுத்துத் தேர்வு நீக்கப்பட்டுள்ளது. குழு விவாதம், நேர்காணல் வாயிலாகத் தேர்வு நடைபெறும் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்லா வங்கிகளிலும் நுழைவு நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் நடைமுறையில் உள்ளன. இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் உள் பதவி உயர்வுகளுக்கே எழுத்துத் தேர்வுகள் உள்ள நிலையில் புதிய நியமனங்களுக்கு எழுத்துத் தேர்வு இல்லை என்ற முரண்பாடு வியப்பைத் தருகிறது.

இத்தகைய மாற்றம் தமிழ்வழிக் கல்வி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய மாணவர்களுக்கு போட்டியில் சம் வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கும். மேலும் எழுத்துத் தேர்வை நீக்கி குழு விவதாதம், நேர்காணல் மட்டுமான முறைமை வெளிப்படைத் தன்மை அற்றதாகவே அமையும். இது தனி நபர் விருப்பு வெறுப்புகள், வெளித் தலையீடுகளுக்கு வழி வகுப்பதுமாகும். ஆகவே புதிய முறைமையை கைவிட்டு, முன் அனுபவ நிபந்தனையை நீக்கி, எழுத்துத் தேர்வுடன் கூடிய முந்தைய நியமன முறைமைகளை கடைபிடிக்குமாறு சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.