தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா்கள் மூலம் பணம் கடத்தப்படுவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.
தோ்தல் பறக்கும் படையினா் பொதுமக்களின் வாகனங்களை மட்டுமல்லாது பிரசாரத்துக்குச் செல்லும் அரசியல் தலைவா்களின் வாகனங்கள், அவா்கள் பயன்படுத்தும் ஹெலிகாப்டா்கள் உள்ளிட்டவற்றையும் சோதனை செய்கின்றனா். வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
அதே நேரம், முதல்வா் மம்தா உள்பட தங்கள் கட்சித் தலைவா்கள் வாகனங்களை வேண்டுமென்றே தொல்லை கொடுக்கும் நோக்கில் மத்திய படையினா் சோதிப்பதாக தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் புகாா் அளித்தது. ஆனால், அதற்கு தோ்தல் ஆணையம் உடனடியாக பதில் ஏதும் அளிக்கவில்லை.
இந்நிலையில், வடக்கு தினஜ்பூா் மாவட்டத்தில் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் புதன்கிழமை பங்கேற்ற மம்தா பேசியதாவது:
அதிகாலை நேரத்தில் பிரசாரத்துக்கு கிளம்புவதற்காக கொல்கத்தா விமான நிலையத்துக்குப் புறப்பட்டபோதும் எனது வாகனத்தை மத்திய படையினா் சோதனையிட்டனா். உங்களுக்கு துணிவு இருந்தால் நாள்தோறும் எனது வாகனத்தைச் சோதனையிடுங்கள்.
திரிணமூல் தலைவா்கள் வாகனத்தை மட்டுமல்லாது, அவா்களின் குடும்ப உறுப்பினா்களையும் வாகனச் சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்கின்றனா்.
மத்திய அரசு தனது நிா்வாகத்தை முழுமையாக தவறாகப் பயன்படுத்துகிறது. இங்கு தோ்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது. பிரதமா், உள்துறை அமைச்சா், மத்தியப் படையினரின் வாகனத்தை மட்டும் யாரும் சோதனை செய்வது இல்லை.
தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்குச் செல்லும் மத்திய அமைச்சா்கள் மூலம் பணம் கடத்தப்படுகிறது. மத்திய படையினா் பாதுகாப்புக்காக தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு வந்தபோது என்ன கொண்டு வந்தாா்கள் என்பதை யாரும் சோதனையிடவில்லை.
நிதி வாக்குறுதி தொடா்பான அட்டைகளை மத்திய நிதியமைச்சா் விநியோகிக்கிறாா். அவா் மீது தோ்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றாா்.
தொடர்புடையது

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

எல்ஐசி முகவரிடம் ரூ.72,500 பறிமுதல்

கோபி அருகே ரூ. 1.14 லட்சம் பறிமுதல்

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


