காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

புத்தாண்டு: மெரீனா கடற்கரை மூடல், ஈசிஆரில் போக்குவரத்து நெரிசல்

புத்தாண்டையொட்டி சென்னை மெரீனா கடற்கரை மூடல்.

News image
சென்னை மெரீனா கடற்கரையில் அலங்கரிக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகள்.
Updated On :31 டிசம்பர் 2024, 3:10 pm

DIN

புத்தாண்டையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை மெரீனா கடற்கரை மூடப்பட்டுள்ளது.

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வாகனங்களில் மக்கள் ஈசிஆரை நோக்கி படையெடுத்து வருவதால் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை அக்கரை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மெரீனா கடற்கரை மூடப்பட்டுள்ள நிலையில், மெரீனா கடற்கரை உள்புறச் சாலையில் வாகனங்கள் நுழையாமல் தடுக்கும் வகையில், அனைத்து வழிகளிலும் சாலைத் தடுப்புகள்கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்கரை உள்புறச் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்தும், கலங்கரை விளக்கத்துக்கு பின்புறம் வழியாக மட்டுமே வெளியேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை சந்திப்பு அருகில் மணிமண்டபத்தை வண்ண பூக்களால் அலங்கரித்துள்ளனர். கண்ணை கவரும் வகையில் அழகிய வண்ணங்களோடு இருப்பதால் பொதுமக்கள் நின்றபடி சுயபடம் எடுத்து வருகின்றனர்.

இன்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண்குமார் இருவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாட உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.