ஒய் எஸ் ஆர் ஜெகன்மோகன் ரெட்டியாகிய நான்... என ஜெகன் தனது பதவியேற்பு உரையைத் தொடங்கியதுமே மக்களிடையே உணர்ச்சிகரமான வரவேற்பும், கை தட்டலும் அதிர்ந்தது ஸ்டேடியத்தில். இந்த பதவியேற்பு நிகழ்வில் தமிழகத்தில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டு ஜெகனை வாழ்த்தினர். ஆந்திர ஆளுநர் நரசிம்மன் முறைப்படி ஜெகனுக்கு பதவியேற்பும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழா நிகழ்வில் ஒய் எஸ் ஆர் ஜெகன் ரெட்டியின் தாயாரான ஒய் எஸ் ஆர் விஜயாம்மா, ஜெகனின் மனைவி பாரதி ரெட்டி மற்றும் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.